மத்திய, மாநிலஅரசுகள், அனைத்து துறைகளிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்; மூன்று மாதங்களுக்குள், இதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில், வேலை வாய்ப்பு வழங்கும்படி, மாற்றுத்திறனாளிகள், நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, “பெஞ்ச்’ முன், விசாரணைக்குவந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுத்துறைகளில் ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பது, பொதுவானவிதியாக இருப்பதால், அதை காரணம் கூறி, மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை நிராகரிக்ககூடாது. அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்விநிலையங்கள் ஆகியவற்றில், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதியவேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்கவேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிளுக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply