டெல்லி சட்ட சபைக்கு டிசம்பர் மாதம் 4ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இது வரை 62 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்ட பாஜக. பிரசார ஏற்பாடுகளில் மும்முரம்காட்டி வருகிறது.

இந்த நிலையில், டெல்லிக்கு உட்பட்ட 70 தொகுதிகளையும் சுற்றி வந்து மோடி, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீடியோபேச்சுகளை ‘3-டி’ தொழில்நுட்பத்தில் வாக்காளர்களுக்கு காட்டும் நவீனபிரசார ரதத்தை டெல்லி பாஜக. உருவாக்கியுள்ளது.

இந்த வாகனத்தில் உள்ள ‘3டி’ திரையில் தோன்றி தலைவர்கள் பேசும்போது, காண்பவர்கள் கண்ணுக்கு அவர்கள் நேரில்பேசுவதை போன்ற உணர்வு ஏற்படும்.

நாள்தோறும் டெல்லியில் உள்ள பத்துக்கும்மேற்பட்ட பகுதிகளில் இந்த நவீனரதம் பிரசாரத்தில் ஈடுபடும். டெல்லி பாஜக. தலைமை செயலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் விஜய்கோயல் இந்த ரதத்தின் முதல்பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Tags:

Leave a Reply