பாஜக.,வின் 3 நாள் தேசியசெயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. லோக் சபா தேர்தலுக்கான புதியவியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ள பா.ஜ.க., ‘சிறந்த நிர்வாகம்’ மற்றும் ‘272+ இடங்கள்’ என்ற முழக்கங்களின் அடிப்படையில், வருகிற லோக்சபாதேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்துவருகிறது.

இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகிவரும் பாஜக , தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய புதிய வியூகங்களையும் தீவிரமாக பரிசீலித்துவருகிறது. இது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக கட்சியின் தேசியசெயற்குழு கூட்டம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று  தொடங்கி 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

Leave a Reply