முறைப்படுத்தப்பட்ட தொழில்துறையினருக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்துவரும் நிலையில் இந்த வலியுறுத்தல் வெளியாகியுள்ளது. குறைந்த பட்ச ஓய்வூதியத்தை நீண்டகாலமாக உயர்த்தாமல் உள்ளது தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

30 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் ஓய்வூதியம் பெறுவதையும் ஜவடேகர் சுட்டி காட்டியுள்ளார். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது பணவீக்க ஏற்றத் தாழ்வுகளை ஒட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக மாநிலங்களவை குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply