ஆறாம் அனுவாகம் : மூத்தவனாகவும், இளையவனாகவும் , முன்பு பிறந்தவனாகவும், பின்பு பிறந்தவனாகவும், நடு வயதினனாகவும் இளம் வயதினனாகவும், நடுப் பகுதியிலிருந்து வந்தவனாகவும் வேரிலிருந்து வந்தவனாகவும், பூமியில் பிறந்தவனாகவும் வேறு உலகங்களில் பிறந்தவனாகவும், நரகத்தில் தண்டிப்பவனாகவும் சொர்க்கத்தில் சுகம்

தருபவனாகவும், வயல்களில் இருப்பவனாகவும் தோட்டங்களில் உள்ளவனாகவும், வேதங்களுக்குள் பாடப்படுபவனாகவும் வேதங்களின் முடிவில் பாடப்படுபவனாகவும், காடுகளில் மரங்களாக உள்ளவனும் புதர்களில் செடிகளாக இருப்பவனும், சப்தமாக உள்ளவனும் எதிரொலியாக இருப்பவனும், வேகமாகச் செல்லும் தரைப்படையாகவும் வேகமாகச் செல்லும் குதிரைப் படையாகவும், நாயகனாகவும் அரசனாகவும், கவச உடையணிந்த வீரனாகவும் தேரோட்டியாகவும், தலைக் கிரீடம் அணிந்தவனாகவும் கவர்ச்சியால் காக்கப்படுபவனாகவும், புகழடைந்தவனாகவும் புகழுள்ள படையில் இருப்பவனாகவும் உள்ளவருக்கு வணக்கங்கள் வணக்கங்கள்!!!

ஏழாம் அனுவாகம் : பெருமுரசாகவும் முரசடிக்கும் கோலாகவும், போரிலிருந்து எப்போதும் பின்வாங்காதவனாகவும் உளவாளிகளின் செய்திகளைப் பரிசீலனை செய்பவனாகவும், தூதனாகவும் ஏவலனாகவும், வாள் உள்ளவனாகவும் அம்பறாத்துணி உள்ளவனாகவும், கூர்மையான அம்பும் வேறு ஆயுதங்களும் கொண்டவனாகவும், சிறந்த ஆயுதங்களையும் சிறந்த அம்பையும் கொண்டவனாகவும், ஒற்றையடிப் பாதையில் நடப்பவனாகவும் அகலமான சாலைகளில் செல்பவனாகவும், கால்வாய் நீராகவும் நதிச் சுழலாகவும் , ஏரி நீராகவும் குளத்தின் நீராகவும், நதி நீராகவும் குட்டை நீராகவும், கிணற்று நீராகவும் ஊற்று நீராகவும், மழை நீராகவும் மழையற்ற இடங்களாகவும், மேகங்களாகவும் மின்னல்களாகவும், வசந்த காலத்து தெளிவான வானமாகவும் மழையும் சூரியனாகவும், வீட்டின் பொருட்களாகவும் வீட்டைக் காக்கும் வாஸ்து புருஷனாகவும், மழையுடன் கூடிய பெரும்புயலாகவும் புழுதிப் புயலாகவும் உள்ளவருக்கு வணக்கங்கள் வணக்கங்கள்!!!!

எட்டாம் அனுவாகம்: உமையின் துணைவனும் துன்பங்களை விரட்டுபவனும், அஸ்தமன சூரியனின் பொன்னிறமும் உதயசூரியனின் வெளிச்சமும், நமக்கு மகிழ்ச்சியைத் தருபவனும் நம்மைக் காப்பவனும், கோபமுள்ளவனும் பயமுள்ளவனும், பகைவனை அழிக்க முன்னிற்பவனும் தூரத்தில் அவனுடன் பேசுபவனும், பகைவரை அழிப்பவனும் எல்லாவற்றையும் கடைசி வரை அழிப்பவனும், கர்மாவை பச்சை முடிகளாகக் கொண்ட மரமாக உள்ளவனும், ஓம் என்கிற உருவில் உள்ள நட்சத்திரமாக இருப்பவனும், இம்மையில் மகிழ்வைத் தருபவனும் மறுமையில் மகிழ்வைத் தருபவனும், இவ்வுலகில் மகிழ்வைத் தருபவனும் வேறு உலகங்களில் மகிழ்வைத் தருபவனும், நல்லவற்றின் உருவமாக இருப்பவனும் நமக்கு நல்லவற்றை அளிப்பவனும், புனித நீரில் இருப்பவனும், சுழலில் வழிபடுகிறப் படுபவனும், மறுமையில் சிறந்த ஆத்மாக்களால் புகழப்படுகிறவனும் இம்மையில் கேட்பதைக் கொடுப்பவனும், பாவ ஆற்றைக் கடக்க உதவுபவனும் மறுமைக்குக் கைதூக்கி விடுபவனும், ஆன்மாக்களை உலகிற்கு அனுப்புபவனும் ஆன்மாக்கள் நற்செயல்களின் பலனை அனுபவிக்கத் தருபவனும், நதிக்கரையின் புல்லாக இருப்பவனும் ஓடும் நதிநீரின் நுரையாக இருப்பவனும் , நதிக்கரையின் மணலாக இருப்பவனும் நதியின் ஓடும் நீராக இருப்பவனும் எவரோ அவருக்கு வணக்கங்கள் வணக்கங்கள்!!!

இதில் ருத்ரம் முழுவதையும் சொல்ல இயலாதவர்கள் எட்டாவது அனுவாகத்தை மட்டும் சொன்னாலே முழுமையாக ருத்ரம் சொன்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது!!! அது அத்துணை சிறப்பு மிக்கது ஆகும்!!! ருத்ரத்தின் இதர அனுவாகங்களில் உள்ள எல்லா மந்திரங்களின் தொகுப்பே எட்டாம் அனுவாகம் என்று சொல்லப் படுகிறது!!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply