அலகாபாத், அஜ்மீர் மற்றும் விசாக பட்டினத்தில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.நாடுமுழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், உபி.,யின் அலகாபாத், ஆந்திராவின் விசாகபட்டினத்தில், ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க, அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்னிலையில், அமெரிக்காவின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவன த்தின் அதிகாரிகளும், ராஜஸ் தான், ஆந்திரா மற்றும் உ.பி., அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய, அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து மூலம், இந்திய – அமெரிக்க ஒத்துழைப்பு புதிய பரி மாணத்தை அடைந்துள்ளது. ஒப்பந்தத்தின் படி, ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பது குறித்த சாத்திய கூறுகள் பற்றி ஆய்வுசெய்யவும், பயிலரங்கம் மற்றும் பயிற்சிகள் அளிக்கவும் அமெரிக்க வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உதவிசெய்யும். அத்துடன் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க, தேவையான நிதி ஆதாரங்களை திரட்டி தருவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற வற்றிலும், மற்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல் படும். இது தவிர, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், நிதி ஆதாரங்களை திரட்டிதருவது உட்பட, பல விதமான உதவிகளை செய்யும். என்று , வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply