அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கலிபோர்னியாவின் சான் ஜோஸின் எஸ்ஏபி சென்டரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

சுமார் ஒரு மணி நேரம் பேசிய பின்னர் முடிவில் மைக்கை திருப்பிய மோடி ஓ..நான் ஒருநல்ல விசயத்தை பகிர்ந்து கொள்ள மறந்துவிட்டேன் என்று கூறி

டிசம்பர் 2ம் தேதி முதல் தில்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்துக்கு 3 நாட்கள் 'நான்ஸ்டாப்' நேரடி விமான சேவை தொடப்பட உள்ளது. மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்க விருப்பதால் உலகிலேயே நீண்டநேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமானசேவை என்ற பெயரும் இந்த சேவைக்குக் கிடைக்கவுள்ளது.

அமெரிக்காவில் இது வரை நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர்இந்தியா தனது சேவையை இயக்கிவருகிறது. தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது. சிலிக்கான் வேலியில் பணியாற்றிவரும் இந்திய ஐடி துறையினரின் நீண்ட கால கோரிக்கையாகும். தற்போது மோடி பயணத்தை யொட்டி இது நனவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply