நாடுமுழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும், டி.டி.எஸ். பிடித்தம்செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ந்தேதியில் இருந்து அகில இந்திய மோட்டார் போக்கு வரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படலாம் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் லாரிகள் வேலை நிறுத்தம் உடனடியாக முடிவுக்கு வரும்.

அதே சமயம், சுங்க சாவடிகளை அகற்றுவது மத்திய அரசால் இயலாதகாரியம் என்று மந்திரி நிதின்கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

325 சுங்க சாவடிகளில் பாதிசாவடிகள், தனியாருக்கு சொந்தமானவை என்றும், அவற்றை அகற்றினால், தனியார் ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம்கோடி வரை இழப்பீடு கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply