தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 30-ம்தேதி முதல் மே 14-ம் தேதிவரை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்செய்ய உள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம் பாடியில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்ன செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் வரும்தேர்தலில் 189 இடங்களில் பாஜக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும் பேசியவர் தமிழகத்தில் ஊழல் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அதிகரித்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார். மோடியின் ஆட்சிக்காலத்தில் இது வரை எந்த தமிழக மீனவர்களும் சுட்டுக் கொல்லப் படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுதான் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுக்கு ஸ்மார்ட்சிட்டி அந்தஸ் தை அளித்துள்ளதாக கூறினார்.

Leave a Reply