அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அணு சக்தியால் இயங்கும் அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ராணுவ அமைச்சகத்தின், பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழுகூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அப்போது, இந்தியாவின் கடல் பாதுகாப்பையும், கடற்படையின் பலத்தையும் உறுதிசெய்யும் விதமாக நீர் மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இந்திய கடற் படைக்கு மொத்தம் 24 நீர் மூழ்கி கப்பல்கள் கட்டப்படும். இதில் 18 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் சக்தியால் இயங்கும் மரபுசார்ந்தவை. இதர 6 நீர்மூழ்கி கப்பல்களும் அணு சக்தியால் இயங்கும் விதத்தில் தயாரிக்கப்படும். இந்த 6 நீர்மூழ்கி கப்பல்களும் துரிதமாக செயல்பட்டு எதிரிகளின் நீர் மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்க வல்லவை என்று தெரிவித்தன.

Leave a Reply