குஜராத்தை ஒட்டியுள்ள ஜகாவ் சர்வதேச கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் 5 படகுகளுடன் 30 மீனவர்களையும் கடத்திசென்றனர்.

நடுக்கடலில் இந்தியமீனவர்களின் படகுகளை வழிமறித்து பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் கண்மூடித் தனமாக இந்தியமீனவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் நரன்சோசா என்ற மீனவர் குண்டுபாய்ந்து சுருண்டுவிழுந்து உயிரிழந்தார். துப்பாக்கி முனையில் மீனவர்களின் 5 படகுகளையும் பறித்துக் கொண்டு அதிலிருந்த 30 மீனவர்களையும் அவர்கள் கடத்திசென்றதாக தப்பி வந்த ஒருமீனவர் போர்பந்தர் மீனவர் சங்கத்திலும், போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இச்சம்பவம்தொடர்பாக மத்திய மந்திரி ஏ.கே.அந்தோனியிடம் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மத்திய அரசு விரைவாக உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

Leave a Reply