தாக்கரேயின் இறுதிச்சடங்குகள், இன்று மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது சிவசேனா தலைவர் பால்தாக்கரே நேற்று காலமானதை தொடர்ந்து மும்பை மாநகர் எங்கும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இருப்பினும் அனைத்து தொண்டர்களும் அமைதி காக்கும்படி சிவசேனா தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாக்கரேயின்

இறுதிச்சடங்குகள், இன்று மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது.

அதற்கு முன்பாக , மும்பையின் முக்கியபகுதிகள் வழியாக அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கரேயின் மறைவை தொடர்ந்து , பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஏற்பாடு செய்திருந்த விருந்தை பாஜக தலைவர்கள் ரத்து செய்தனர்.

Tags:

Leave a Reply