மதுரை மேலமாசி வீதியில் உள்ளது நந்தகோபால நாயகி ஸ்வாமிகள் ஆலயம். 1853 ஆம் ஆண்டு நெசவானிகள் பிரிவைச் சேர்ந்த மதுரை சௌராஷ்டிரக் குடும்பதது திரு ரெங்க ஐயர் மற்றும் இலஷ்மி அம்மாளுக்குப் பிறந்தவர். அவருக்கு இராமபத்திரன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். சிறு வயது முதலேயே அவருக்கு ஆன்மீக நாட்டமே இருந்தது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்துக்குச் சென்று அங்கு முருகப் பெருமானின் சன்னதிக்கு எதிரில் இருந்த குகையில் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்தார்.

அங்கிருந்து பரமக்குடிக்குச் சென்று ஸ்ரீ நாகலிங்க அடிகளை தமது குருவாகக் கொண்டு அஷ்டாங்க யோகம் போன்ற சித்திகளை மிகக் குறைந்த நாளிலேயே பயின்று யோக வலிமை பெற்று சதானந்த சித்தர் எனப் பெயர் கொண்டார். அங்கிருந்து அவர் பல இடங்களுக்கும் சென்றார்.

ஒரு முறை சிவகங்கை மன்னன் அவருடைய தவ வலிமையை சோதிக்க அழகான பெண்ணை அவர் தனியாக இருந்த இடத்திற்கு அனுப்பினார். ஆனால் வந்தவளை ஸ்வாமிகள் சக்தி தேவியாகவே பார்க்க அவரை மயக்க வந்தள் காரியம் தோல்வி அடைந்தது. அதன் பின் ஸ்வாமிகளை மீண்டும் சோதிக்க அந்த மன்னன் ஒரு பாதாள அறையில் அவரை பூட்டி வைத்து மேல் பாகத்தை சிமெண்ட் போட்டு மூடினர். ஆனால் 45 ஆவது நாளில் ஸ்வாமிகள் தனது யோக வலிமையினால் அந்த பூமியை பிளந்து கொண்டு வெளியேறி விட்டார்.

மதுரையில் ஒரு இத்தில் படுத்து உறங்கியவர் மீது சூரிய ஒளி வழாமல் இருக்க அவர் தலை பக்கத்தில் ஒரு பாம்பு படமெடுத்து சூரிய ஒளிளை அவர் விழிக்கும் வரை தடுத்து நின்றதாம். அது போல ஒரு முறை திருடர்கள் அவரிடம் கொள்ளையடிக்கச் சென்றபோது அவர் அவர்கள் மீது விசிய மணலினால் கண்கள் குருடாயினர். இப்படியாக மகிமைகள் செய்து கொண்டு சென்றவர் கும்பகோணம், திருப்புவனம் போன்ற இடங்களில் பயணம் செய்தார். திருப்புவனத்தில் அவருக்கு ஒரு பெண்மணி பெண்கள் அணியும் உடையையும், நகைகளையும் பரிசாகத் தர அன்று முதல் அப்படிப்பட்ட உடைகளையே அணியத் துவங்க அவருடைய பெயர் நந்தகோபால நாயகி என ஆயிற்றாம்.

சௌராஷ்டிரத்தை சேர்ந்தவர் என்றாலும் சௌராஷ்டிரத்திலும் தமிழிலும் பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். பல இடங்களுக்கும் சென்று தாமே அவற்றைப் பாடியும் மகிமைகளையும் செய்து வந்தவர் முன்கூட்டியே தான் சமாதி அடையப்போகும் நேரத்தையும் நாளையும் கூறிவிட்டு அதன்படி 1914 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்.

அவர் விரும்பியவாறே அவரை மதுரை யோக நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் காதக் கிணரு என்ற பகுதியில் குழி தோண்டி அமர்ந்த நிலையிலேயே அதில் வைத்து மூடி சமாதி ஆலயமான பிருந்தாவனத்தை அமைத்தனர். அவரை சௌராஷ்டிர ஆள்வார் எனறே அழைத்துப் போற்றினர். அவருடைய ஆலயம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதியில் அமைந்து உள்ளது.

TAGS; மகிமைகள் ,நந்தகோபால நாயகி  ஸ்வாமிகள், துறவி ,துறவு , துறவிகளின் ஆன்மிக வாழ்க்கை , துறவிகள்  துறவிகளும் வந்தனர் , துறவிக்கு வேலை , துறவியாக விருப்பம்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.