மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நூறுசதவிகிதம் பாதுகாப்பானதல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்குசீட்டு முறைக்கு மீண்டும் மாறவேண்டும் என் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்துதெரிவித்துள்ளது.

இயந்திர வாக்குபதிவு முறையை பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிராகரித்து விட்ட நிலையில், அங்கு தயாரிக்கபட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் எப்படி நம்பகத்தன்மை உடையவையாக இருக்கும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தனதுமனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல என்று தெரிவித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யமுடியாது என்பது நிரூபிக்கபடவில்லை என்றும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து நிலவும் சந்தேகங்களை முழுமையாக தீர்க்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.