யோகம் – யோகா : ஆன்மா இறைவனோடு சேர்வது குண்டலி: குண்டு + ஒளி என்பதே குண்டலி, தாவரங்கள் வெளிசக்தி, ஈர உணர்ச்சியுடன் வளர்ந்து பருவத்தில்வித்தாக வந்து முடிகிறது. அது போன்று எல்லா உயிரினங்களும் அனேக வித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக_வளர்ந்து முடிவில் விந்துவாக ஆகிறது. மனித உடம்பில் இரத்தநாடிகள் இருக்கும் இடத்தில் எல்லாம் விந்து வியாபித்திருகிறது.

விந்துவின் புறமும், உள்ளும், இருக்கும் சத்தியே 'குண்டலினி' என்று சிலர் கூறுகின்றனர்

சமீபகாலமாக குண்டலினி யோகப் பயிற்சியைப் பற்றிய நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளியாகி உள்ளது. இது விஞ்ஞான பூர்வமான முறையிலும் விளக்கம் செய்யப் பட்டு வருகிறது.

நம் நாட்டில் உள்ள யோகாசிரியர் பலரிடம் இப்பயிற்சியை கற்று கொள்ளும் ஆர்வத்தில் வெளிநாட்டினர் பலரும் வந்து தங்கி பயின்று வருகிறார்கள். யோகாசிரியர்கள் குண்டலினி என்னும் சக்தி முதுகந்தண்டின் கீழே உறக்கத்தில் இருக்கிறது அதை விழிப்படைய செய்து மேலே கொண்டு வந்து புருவ நடுவில் நிறுத்திவிட்டாலே யோகசித்தி!? என்று தவறான முறையில் பயிற்சி அளிக்கின்றனர்!?. உண்மை யாதென்று சித்திர்களின் முறையை காண்போம்.

திருமூலர்: என்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்கிறார்.குண்டலி இறைவனின் இருப்பிடம் என்றால் அது மலம் மூத்திரப்பைக்கு இடையில் மாட்டி அவதிப் படவேண்டுமா சிந்தியுங்கள் ! குண்டலியின் இருப்பிடம் பற்றி திருமூலர் திருமந்திரம் – 580 பாடலில் மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ் நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால் விரற் கீழே மூலாதாரத்திற்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் (மூலாதாரம் என்பது திருமூலரின் குறிப்பின் படி சிரசில் உள்ளதாகும்)

முன்பக்க பார்வை உடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறித் தானத்துக்கு இரண்டு விரலளவு கீழே உள்ளது மான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுஞ்சுடர் உடம்பில் உந்திக் கமலத்துக்கு (உன்+தீஸ்ரீஉந்தி) நான்கு விரலளவு கீழேயுள்ளது. ஓளவையார் விநாயகர் அகவலில் இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலினி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பு கருத்தறிவித்தே. தாயுமானவப் பெருந்தகை குண்டலியின் பெருமையையும் அமிர்தம் பெறும் வழியையும் கூறுகின்றார்.

நெடிது உணர்ந்து இதய பத்ம பீடம்மிசை நின்று இலங்கும் அசபாநலத்து இயல் அறிந்துவளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவன் அருளினால் எல்லை அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோனமனு முறையிலே வயம் மிகுத்துவரும் அமிர்த மண்டல மதிக்குளே மதியை வைத்து நான் வாய் மடுத்து அமிர்த வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் செயம் மிகுந்துவரும் சித்த யோகநிலை பெற்று ஞான நெறி அடைவனோ….. என்கிறார்.

இதய பத்ம பீடம்மிசை என்பது குண்டலி இருப்பிடம்.ஆதலால் ஞானமடைந்து இறவா நெறியை கற்று உணர்ந்து கொள்ள தகுதி வாய்ந்த குரு பிரானின் துணையை நாடி அவர் காட்டியருளும் ஞான நெறியை அடைய வேண்டும்.சித்தர்கள் குண்டலியை பரிபாசையில் பின் வருமாறு கூறியுள்ளனர்

சில வற்றைக் காண்போம். திருவடி காய கற்பம் சந்திர புஷ்கரணி எட்டிரண்டு மூல அனல் திருச்சிற்றம்பலம் முப்பூ , இருதயம் , புருவ மத்தி, விந்து, சுழுமுனை நெற்றிக் கண் கருநெல்லி வைகுண்டம் வேகாத்தலை சாகாக்கால் வெட்டாத சக்கரம் முக்கோணம் அருத்தடைத்த வாசல்.

இவை அனைத்தும் குறிப்பது ஒன்றையே இதை ஞான குருவால் மட்டுமே தீட்சையாக உபதேசிக்க முடியும் மற்றவர்களால் இதனை விளக்க இயலாது

குண்டலினி, யோகா, என்றால் என்ன, குண்டலினி யோகம், குண்டலினி சக்தியை, குண்டலினியை

நன்றி சிவராமன் USA

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.