இன்றைய நவீன உலகில் பதவி புகழ் ஆசை என அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கடின உழைப்பாற்ற வேண்டியுள்ளது காரணம் நவீன சாதனங்களை வாங்கி தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இவ்வாறாக வாழ்க்கை சூழலில் தான் ஒருவாராக விடுபட எண்ணும் போது அவன் தேடுவது ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றி அறியும் ஞானமாகும், அது நம்மை ஞான மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழியேயன்றி வேறில்லை. ஆனால் இன்று உலகில் நடப்பதோ ஆன்மீகம் என்ற பெயரில் உடற்பயிற்சி, மனப்பயிற்சி, தியானப் பயிற்சி, குண்டலி யோகம், வாசிப் பயிற்சி என்று இன்னும் பலவும் கற்றுத் தருவதாக கூறி எங்கும் விளம்பரப்படுத்தி பல குழுக்களை ஊர்தோறும் அமைத்து போதிக்கப்படுகிறது.

இங்கு கற்றுத் தருபவைகள் பெரும்பாலும் இறைவனை அடையக்கூடிய ஞான மாhக்கமே அல்ல. இத்தகைய வேடதாரிகளை இனம் கண்டு கொள்ளவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஞான குரு யார்? என்று கேள்வியும் கேட்டு அவர்களே அதற்கான பதிலையும் கூறியுள்ளார்கள். சித்தர்கள் யோக ஞான ரகசியங்களை பரிபாசையில் கூறிவைத்தார்கள், இந்த பரிபாசை தெரியாதவர்கள் யோகமும், ஞானமும் அpறயாதவர்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

போலி குருமார்கள், யோக ஆசிரியர்கள், போலி ஞானிகளிடமும் மக்கள் ஏமாந்து போகக் கூடாது என்பதே சித்தர்களின் முக்கிய நோக்கமாகும். இனி சித்தர்கள் யாரை ஞானியர் என்று அறிய வழி கூறுகிறார்கள். முருகப் பெருமான் கூறுகிறார்…..

பாரப்பா ஜெகஜால ஞானியோர்கள்
பசி பொறுக்க மாட்டாமல் புரட்டுப் பேசி
ஆறப்பா வேடங்கள் தறித்துக்கொண்டு
அவன் காலில் குறடிட்டே அலைவான் பாவி….என்றும்…
காணடா வாசி நிலை காட்டச்சொல்லு
கங்கும் மதிரவியுடைய கருனை கேளு
தானடா கற்பநிலை காட்டச்சொல்லு
சாரனையும் தாரனையும் சாற்றச்சொல்லு
கோனடா குரு நிலையைக் தெரியக்கேளு குலதெய்வம் எஃதென்று குறித்துக் கேளு நூனடா நானிருக்கும் இடம்தான் கேளு
நவிலா விட்டால் பல் உதிர அடித்துத் தள்ளே என்கிறார்…
அகத்தியப் பெருமானும்
ஏகமெனும் ஒரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துறைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே
அறிந்தவரென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாக்கால் சாகாத்தலை விரைந்து கேளாய்
விடுத்ததனை உறைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்போன் ஞானி.

என்று ஒருவர் சற்குரு பெருமான இல்லையா என்று அறிய வழி கூறயுள்ளார். சித்தர்களின் பரிபாஷைக்கு முழு விளக்கம் அளிப்பவர்களே உண்மையான குருமார்கள். அவர்களிடம் உண்மையான ஞானத்தேடல் உள்ளவர்களை இறைவனே வழி நடத்திச் சென்று கனிகள் நிறைந்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகள் போல் கொண்டு
சேர்ப்பார்.

Tags; போலி, ஆன்மிகவாதிகள், யார் , போலி சாமியார்கள், போலி சாமியார்

நன்றி சிவராமன் USA

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.