70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7–ந் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க, ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிரசாரம்செய்கிறார். அவர் தனது பிரசாரத்தை வருகிற 31–ந் தேதி தொடங்குகிறார்.

4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று மோடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 31–ந் தேதி சி.பி.டி. மைதானத்திலும், பிப்ரவரி 1–ந் தேதி துவாரகா விலும், 3–ந் தேதி ரோசினியிலும், 4–ந் தேதி தெற்குடெல்லியிலும் அவர் பிரசாரம்செய்ய உள்ளார்.

Leave a Reply