ஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத இயக்கம் மட்டும்மல்ல, பயங்கரவாத இயக்கமும் கூட என மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி திருவாய் மலர்ந்துள்ளார் .

இதற்க்கு இவர் கூறும் காரணம் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து பிறகு வெளியேறிய ஒருவர் சம்பந்த பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் .

அதாவது ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் தவறு செய்தால் அதற்க்கு அந்த இயக்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அப்படி பார்த்தோம் என்றால் பற் பல இந்நாள் நக்சலைட்டுகள் முன்னாள் சிபி எம் ஊழியர்களே! அதற்க்காக மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்களுக்கு கம்யூனிஸ்டுகளின் மேல் பழி போடலாமா ? அதை போன்று RSSலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் செயல்களுக்கு RSS சின் மீது குற்றம் சுமத்துவது முட்டாள்தனமே!

கடந்த 1995ம்_ஆண்டு நாகூரைசேர்ந்த இந்து முன்னணி தலைவரான முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலமாக ஒரு பார்சல்_வந்தது. அதைபிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம், அதிலிருந்த வெடிகுண்டு வெடித்து பலியானார்.

இந்தவழக்கில் ரிபாயி,குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யபட்டனர். சமீபத்தில் தான் ரிபாயி, தமுமுக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , இதற்காக தமுமுக வை உங்களால் விமர்சிக்க முடியுமா .

1998-ஆம் அண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டவர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி , ஆனால் அவருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் தானே உங்கள் கேரள கம்யூனிஷ்ட்டுகள் , மேலும் முன்னால் கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஒரு படி மேலே போய் தன்னுடைய சில அமைச்சர்களை கோவை_சிறையில் மதானியை சந்தித்து தைரியம் கூறுமாறு பணித்தார். பிறகு அச்சுதானந்தனே நேராக சென்னை வந்து அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியை_சந்தித்து மதானியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் இரட்டை வேடம் ,

ஒரு அமைப்பின் தலைவர் குற்றம் செய்தால் வாய் திறக்க மறுக்கும் கம்யூனிஷ்ட்டுகள், ஒரு அமைப்பின் பல லட்சம் தொண்டர்களில் ஒரு சிலர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே குறை கூறுவது ஏனோ . இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.