நம்முடைய ஜனனம் மாதா, பிதாவால் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தம உள்ளதாக செய்பவர்கள்  நம்முடைய ஆசிரியர்களே! குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும் – இறைவனினுடைய அருள் கிடைத்து நிம்மதியாக நாம் வாழ முடியும்.

ஒரு குழந்தையை , “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்று தந்து

அவர்களை மிக சிறந்த மனிதர்களாக சேதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள்! ஆசிரியர்களின்  சொல்லை  கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்தி கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் வழமாகவும், சிறந்த மனிதனாகவும் இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் குருகுல நண்பர்கள். அந்த காலத்தில் குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், குருகுலத்திலேயே தங்கி படிக்க வேண்டும்;

கல்வி பயிலும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் குருவின்  கட்டளைகளை செய்ய வேண்டும். ஒருநாள் இவர்கலுடைய  குரு சாந்தீபனி முனிவரிர் மனைவி குசேலரையும், கிருஷ்ணரையும், உணவு சமைப்பதற்க்காக  விறகு பொறுக்கி வரச்சொல்லி காட்டிற்கு அனுப்பி விட்டாள்.

குருவின் மனைவியி இட்ட  கட்டளையை ஏற்ற குசேலரும் , கிருஷ்ணரும், காட்டிற்கு சென்று விறகு பொறுக்கி கொண்டு இருந்தனர் . அப்பொழுது பெரும் மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க ஒரு மரப்பொந்தில் விறகை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளை காணாத குரு, மனைவியை கடிந்து கொண்டு குழந்தைகளை தேடி சென்றார்.

குருவின் மனைவியி இட்ட கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிகவும்  நன்றாக இருப்பீர்கள் என்று ஆசிர்வதித்தார். குருவின் ஆசிர்வாதம் பலித்தது.   கிருஷ்ணர் துவாரகையின் மன்னரானார்; ஏழையான குசேலர், கிருஷ்ணனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

மேலும் ஒருவன் தான் கற்ற கல்விக்காக குருவிற்கு தட்சணை வழங்க வேண்டும், இல்லாவிடில் தான்  கற்ற கல்வி பயன் அற்றதாக போகி விடும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.