தமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்…

பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்…

தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது…

பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது…

என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது…

மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மோடியை புகழ்ந்து பேச ஆரம்பித்துள்ளது திராவிட கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது…

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது திராவிட அரசியலில் புயலை கிளப்பியுள்ளது…

மேலும் தமிழகத்தில் மோடி அம்பேத்கரை போன்றவர் என்று இசையின் ராஜா இளையராஜா கூறியது. மோடி மகாத்மா காந்தியை போன்றவர் என பெரம்பலுர் பாரளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கூறினார்…

மோடி அப்துல் கலாமை போன்றவர் என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார்…

மோடி முத்துராமலிங்க தேவரை போன்றவர் இயக்குனர் பேரரசு, கூறியுள்ளார்…

மோடி மாதிரி உழைப்பால் எந்த பதவிக்கும் வரலாம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மோடியை குறை கூறுபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் நடிகரும் இயக்குனரும் பாக்கியராஜ் கூறியுள்ளார், அனைத்தும் தமிழகத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது…

மதிமுகவில் வைகோ மகன் துரைவைகோ விற்கு பதவி கொடுத்துள்ளது மிக பெரும் சர்ச்சையை கிளப்பி தற்போது தான் சற்று அமைதியாக உள்ளது, இந்த நிலையில் மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யா மோடிக்கு ஆதரவான நிலைப்படை எடுத்துள்ளது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது…

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அண்ணாமலை வதம் செய்ய தயாராகி விட்டார்…

அம்பேத்கர் குறித்து விவாதிக்கலாம் என திருமாவளவனுக்கு நேரடி சவால் விட்டது தற்போது சூட்டை கிளப்பியுள்ளது…

பல கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவிடம் பேசி வருகிறார்கள்…

திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் டெல்லி தரப்பிடம் பேசி வருகிறார்கள்…

தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்…

மின் வெட்டு ஆரம்பித்துள்ளது, இதன் காரணமாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, மேலும் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கதை விட்டு வருகிறார்கள்…

இந்த நிலையில் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டால் உதயநிதியை சந்தித்துவிட்டு முதல்வரை சந்திக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது…

பல சிறிய கட்சிகள் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கமலாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது…

இது தமிழக ஆளும் தரப்பில் சற்று கிலியை ஏற்படுத்தியுள்ளது. அமமுக தரப்பை வளைத்து போடுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. முக்குலத்தோர் மத்தியில் ஒரு முக்கிய தலைவரை முன்னிலை படுத்த தயாராகி வருகிறது பாஜக…

தமிழகத்தில் பாஜக விரைவில் பல அதிரடி மாற்றங்களுடன் அதிரடி அரசியல் செய்வதற்கு தயாராகியுள்ளது…

தமிழக பாஜக இதற்கு டெல்லி தரப்பு முழு ஆதரவை தந்துள்ளது…

Comments are closed.