ஆட்சேப கரமான விதத்தில், பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட, 32 இணைய தளங்களை, மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை, தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ், மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.

முடக்கப்பட்ட இணைய தளங்களில் பெரும்பாலானவை, ஐஎஸ்ஐஎஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செய்திகளை கொண்டிருந்ததாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய அந்த இணைய தளங்களின் செயல்பாடு குறித்து ஆராய்ந்த, பயங்கரவாத எதிர்ப்புபடையினர், அது குறித்து, தகவல் தொழில் நுட்பத் துறைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், அந்த இணையதளங்கள் முடக்கப் பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், இணைய தளங்களுக்கு தணிக்கை உண்டு.

சீனாவில் இணைய தளங்களை தணிக்கைசெய்யும் அமைப்பு, பேஸ்புக், கூகுள் போன்ற இணைய தளங்களை கூட, சிலநேரங்களில் தடைசெய்து விடுகிறது. ஆனால் இந்தியாவில், இணையதள தணிக்கைமுறை இல்லை.

2 responses to “32 இணைய தளங்களை, மத்திய அரசு முடக்கியது”

  1. VIJAYABOOPATHY says:

    நான் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவன் எனக்கு நமது மத்திய அரசின் காப்பீடு, முத்ரா, தங்கமகள், தூய்மை, இந்தியா போன்ற அனைத்து திட்டங்களின் முழு விவரங்கள் கிடைக்குமா
    விஜயபூபதி
    9787891616

Leave a Reply