தினமும் ரூ.33 இருந்தால் நகர் புறங்களிலும் , ரூ 27 இருந்தால் கிராமபுரங்களிலும் ஒருவரால் வாழமுடியும் என்று திட்டக்கமிஷன் கூறியுள்ளது. இதையடுத்து ரூ.33ல் ஒருநாள் வாழ்ந்துகாட்டுங்கள் என்று கூறி அந்ததொகையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்

பா.ஜ.க தலைவர் விஜய்கோயல். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், கிராமங்களில் தினமும் 27 ரூபாயிலும், நகர் புறங்களில் 33 ரூபாயிலும் வாழமுடியும் என்று திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லி பா.ஜ.க தலைவர் விஜய்கோயல் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திட்டக்கமிஷன் துணை தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோருக்கு ரூ.33 பணத்தை மணி ஆர்டர் அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோயல் கூறுகையில், பிரதமர், சோனியா, அலுவாலியா மற்றும் ஷீலாதீட்சித் ஆகியோர் ரூ.33 ரொக்கத்தை வைத்து ஒருநாளை கழிக்கட்டும் பார்க்கலாம் என்றார்.

Leave a Reply