முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா வீட்டில், சி.பி.ஐ. நடத்திய சோதனையில்  முக்கிய ஆதாரமாக  டைரி ஒன்று கிடைத்துள்ளது, பல முக்கியமான பரபரப்பான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், ராஜாவின் டில்லி, சென்னை , பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், தொலை தொடர்பு துறை அதிகாரிகள் வீடு உள்ப்பட ஒரே நேரத்தில் 14 இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது, 

சோதனையின் போது, முக்கிய பல ஆவணங்கலை  சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது .
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக,  ராஜாவின் பெர்சனல் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி பரிமாற்றம் , நிறுவனங்களின்-நிதி கைமாறல், தனி நபர் குறித்த ஆவணங்களை எளிதாக அழித்துவிட  இயலாது . அவற்றையெல்லாம் தேடி கண்டுபிடித்து வருகிறோம்.  ராசாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகள் வழக்கு விசாரணைக்கு மிகவும் உதவியாக உள்ளன. இவற்றை சாட்சி ஆவணங்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என  அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.