நாடுமுழுவதும் கடந்த 2004-2013 ஆம் ஆண்டுகள் வரை 3.43 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதி நிலங்கள் வளர்ச்சி திட்டங்களுக்காக திருப்பி விடப் பட்டுள்ளன என்று லோக் சபாவில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் பருவ நிலை மாற்றம் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- கடந்த 2004-2013 ம் ஆண்டுகள் வரை 13, 891 வளர்ச்சி நலதிட்டங்களுக்காக 3,43,909 வனப்பகுதி நிலங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக 14,254 மரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply