அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தி எம்.பியும் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்விகேட்பார்கள் என்று பயந்து ராகுல் காந்தி, கேரளாவின் வயநாட்டில் இந்த முறை போட்டியிடுகிறார்.

கேரளாவில் ராகுல் காந்தி செல்லும் நேரத்தில் அங்கு திருப்திபடுத்தும் அரசியல் நிலவிவருகிறது. உங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்புடன் விளையாடினீர்கள். நாட்டில் எங்கு நீங்க சென்றாலும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்விகேட்பார்கள்

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, சுவாமி அசீமாநானந்த் மற்றும் அப்பாவிகளை சிறையில்தள்ளியது காங்கிரஸ். இந்து மதத்தின் மீது தீவிரவாதச் சாயம் பூசியது.

சம்ஜவுதா ரயில் தீவிரவாத தாக்குதலில் அப்போதைய மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ராகுல் காந்தி ஆகியோர், அமெரிக்க அதிகாரிகளிடம், லஷ்கர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, ஆனால், இங்கு இந்து தீவிரவாதம்தான் இருக்கிறது. ஆனால், விசாரணை முடிந்து, சுவாமி அசீமானானந்த் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்புபடுத்தி பேசி காங்கிரஸ் கட்சி பெரியபாவத்தை செய்தது. இதற்காக ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வாக்குவங்கிக்காக புனிதமான இந்து சமூகத்துக்கு பாவம் செய்து விட்டார்கள்.

இந்து எப்போதாவது தீவிரவாதியாக முடியுமா, எறும்புக்குக்கூட உணவு அளித்து காத்துவரும் இந்துக்கள் எவ்வாறு தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்ற ராகுலுக்கு தெரியாது. ராகுலகாந்தி இதுபோன்று பேசியதற்கு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்.

நான் ராகுலிடம் ஒருகேள்வி கேட்கிறேன், ஏன் உங்கள் கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு செல்ல விடாமல் தடுத்தார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் ஏன் வைக்கப்பட வில்லை. இன்று நீங்கள் அம்பேத்கரை குறிப்பிட்டு பேசுகிறீர்கள், ஆனால் மோடி அரசு அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி வருகிறது.

மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் உருவாக்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் யார்பிரதமராக வருவார் தெரியுமா. உங்களின் கூட்டணியில் கொள்கை இல்லை, நடைமுறை இல்லை. மோடியைப் பார்த்து அச்சப்பட்டு ஒன்றாக இணைந்துள்ளார்கள்

அமித் ஷாஉ.பி.,யில்  பேசியது .

Leave a Reply