முல்லை பெரியாறு அணை பலமாக இருக்கிறது . அதனால், புதிய அணை கட்டத் தேவையில்லை. புதிய அணை கட்டும்திட்டத்தை, கேரள அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது : அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம். அணையை ஒட்டிய பகுதிகளில் உருவான நில நடுக்கம் லேசானது. அதனால், எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. பேபி அணையும், பிரதான அணையும் நன்றாகவே இருக்கிறது . அணைதொடர்பான பிரச்னையை 2 வழிகளில் தீர்க்கலாம். முதல் தீர்வு என்ன வெனில், திட்ட கமிஷன் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் தந்தால் , கேரள அரசு தன்சொந்த செலவில் புதிய அணையை கட்டலாம். அதே நேரத்தில் புதிய அணை கட்டும்பணி முடியும்வரை தற் போதைய அணையை உடைக்க கூடாது. அதன் செயல்பாட்டை நிறுத்த கூடாது.

அதே நேரத்தில் தண்ணீர்தொடர்பான தமிழகத்தின் உரிமைகள் காக்கபட வேண்டும். இரண்டாவது தீர்வு என்னவென்றால் , அணையில் எதிர் காலத்தில் பராமரிப்புபணிகளை மேற்கொள்ளும் போது, அணையின் அடிப் பகுதியில் இருந்து 50 அடிஉயரத்தில், சுரங்க பாதை ஒன்றரை அமைக்கவேண்டும். மக்கள் அச்சம்போக்க இதைசெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.