சேலத்தில் பா.ஜ.க மாநிலசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சென்ற மாதம் 19ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தவழக்கை சிபிசிஐடி.யின் சிறப்பு புலனாய்வுபிரிவு அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கிச்சான்புகாரி, சுலைமான் உள்ளிட்டோர் பெங்களூர்சிறையில் உள்ளனர். அவர்களுக்கும் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்துவிசாரித்தனர்.

அப்போது அவர்கள் பாளையங் கோட்டையில் வெடிபொருட்களை பதுக்கியதாக கூறினார்கள். அந்த தகவலின்பேரில் சாகிப் என்பவரை கைதுசெய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கிச்சான்புகாரி, சுலைமான், சாகிப் ஆகியோரிடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கிச்சான்புகாரி தனது கைதுப்பாக்கியை கோவை கரும்புக் கடை அருள் நகரைச்சேர்ந்த முகமது அன்சார் (35) என்பவரிடம் கொடுத்துவைத்திருப்பதாக கூறினார்.

அதன்பேரில் போலீசார் அருள் நகர் பகுதியில் முகாமிட்டு முகமது அன்சாரை கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சாக்கடையில் பதுக்கி வைக்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கியை பறிமுதல்செய்தனர். அந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

துப்பாக்கியில் 35 குண்டுகள் இருந்தன. நவீனரக துப்பாக்கியை என்ன காரணத்திற்காக பதுக்கிவைத்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் 35 குண்டுகளுடன் வெளிநாட்டு துப்பாக்கி சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply