நான் எப்போதுமே 370 சட்டத்துக்கு எதிராகவே இருந்துள்ளளேன்  370 சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அத்வானி கூறியது மக்களை ஏமாற்றும்செயல் என்று உமர் அப்துல்லா கூறியகருத்துக்கு அத்வானி கண்டனம்தெரிவித்துள்ளார்.

அத்வானி தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், தான் எப்போதுமே 370 சட்டத்துக்கு எதிராகவே இருந்துள்ளதாகவும் இந்தவிஷயத்தில், மோசடி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவேண்டாம் என்றும் உமர் அப்துல்லா வுக்கு பதில் அளித்துள்ளார்.

ஜவகர்லால்நேரு மற்றும் சில தலைவர்களைத்தவிர, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களுக்கு ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவதில் சம்மதமே இல்லை என்றும் அதில் கூறியுள்ளார்.

Leave a Reply