கோயில் சொத்துக்க ளை மீட்க தொடர்ந்துபோராடுவோம்; ராமகோபாலன்  கோயில் சொத்துக்க ளை மீட்க தொடர்ந்துபோராடுவோம் என இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் தெரிவிததுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆலயங்கள் என்றென்றும் நிலைத்து நின்று ஆன்மீகத்தைப் பரப்ப நமது முன்னோர்கள் ஏராளமான நிலங்களையும், சொத்துகளையும் ஆலயத்திற்கு எழுதி வைத்துள்ளார்கள். அப்படி எழுதிக் கொடுத்த சொத்துகளைப் பரம்பரை தர்மகர்த்தாக்கள் சரிவர பராமரிக்காமல், ஊழல் நடக்கிறது என்று கூறி பாதுகாக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியது. நிர்வகிக்க மட்டுமே அதிகாரம் உள்ள அரசு அதில் அரசியலைப் புகுத்தி மெகா மெகா ஊழலால் பல்லாண்டுகளாக திணறடிக்கிறது. அரசின் நேரடி நிர்வாகத்தால் ஆலயச் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு கோயில் நன்றாக நடக்க வழி ஏற்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது.
பள்ளிக்கரணை பகுதியில் சுமார் 50 ஏக்கர் சதுப்பு நிலங்களை தெரஸா அறக்கட்டளைக்குக் கொடுத்துள்ளதாகவும், மேடவாக்கத்தில் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலம் காயிதேமில்லத் அறக்கட்டளையை நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத்திடம் வழபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அம்பத்தூர் நகரில் பிரதான சாலையில் பெரியார் நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நகராட்சி இலவசமாக இடம் அளித்துள்ளது. அரசுக்கு இடம் தேவையெனில் இதுபோல் கொடுக்கப்பட்ட இடங்களைத் திரும்பப் பெறட்டும்.

‘கோயில் நிலங்களைப் பணமாக மாற்றினால் உபயோகமாக இருக்கும்’ என்பது நாடகம். சமீபத்தில் திருவேற்காடு கோயிலில் 1006 திருமணங்கள் நடைபெற்றது. இதற்கு ஆலய வருமானங்களிருந்து செய்த செலவு சுமார் 6 கோடி. இதுபோல தொடர்ந்து நடத்தப்பட்டால் ஆலயத்திற்கு என்ன மிஞ்சப்போகிறது?

திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோயில் 47 ஏக்கர் இடத்தை 52 கோடிக்கு அரசுத் துறைக்கு எடுப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதன் சந்தை மதிப்பு இன்று 150 கோடிக்கும் மேல்.
அதுபோல இந்துத் துறவிகள், ஆன்றோர்களின் சமாதிகளான அதிஷ்டானங்கள், மடங்கள், ஆதினங்கள் போன்றவற்றை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர எடுத்துள்ள முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. முஸ்லீம்களின் சமாதியான தர்காக்களில் அரசு கைவைக்குமா? அப்படியிருக்க இந்துக்களை ஏன் தனது கைப்பிடிக்குள் வைத்து இறுக்க நினைக்கிறது?

ஆலயச் சொத்துகளைப் பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும். இது இந்துக்களின் ஜீவாதார கடமை என்பதை உணர்ந்து போராட அனைவரையும் இந்து முன்னணி அழைக்கிறது.

இவ்வாறு ராமகோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.