கலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? அப்பப்பா !!

முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு

நல்ல கணவன் அமையவும்,இளைஞருக்கு சிறந்த மனைவி அமையவும் பின்வரும் வழிபாட்டுமுறையைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை வளமாகவும்,சிறப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏனெனில் இந்த ஆனி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.இந்த வருடம் 13.7.2012 அன்று இந்த நாள் அமைந்திருக்கிறது.

இந்த நாளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் 9 கொய்யாப்பழங்கள்,முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை;நெய் தீபம்,டயமண்டு கல்கண்டு குறைந்தது 1 கிலோ;எலுமிச்சை சாதம்(லெமன்) உடன் மிளகு சேர்த்த சாம்பார் இவைகளைக் கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று இந்த 1.30 மணி நேரமும் இருந்து மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.அப்போது ஒரு எலுமிச்சை பழத்தையும் கொண்டு வர வேண்டும்;அதில் ஒரு புதிய கத்தியை சொருகி அம்மன் பாதத்திற்குக் கீழே அல்லது அம்மனின் கைக்கு அருகில் வைக்க வேண்டும், பிறகு அந்த படையலான எலுமிச்சை சாதத்தையும்,டயமண்டு கல்கண்டையும் அங்கே இருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும், மீதியை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.

இப்படிச் செய்ய முடிவெடுத்த நாளிலிருந்து 4 மாதங்களுக்கு இந்த வழிபாடு செய்பவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.இந்த வழிபாட்டினை உச்சினி மாகாளி,காளியம்மன் முதலான உக்கிரமான பெண்தெய்வக்கோவில்களில் ஒருபோதும் செய்யக் கூடாது  சாந்தமான எந்த ஒரு பெண் தெய்வத்து கோவில்களிலும் (லட்சுமி, சரஸ்வதி, சக்தி, ஈஸ்வரி) இந்த வழிபாட்டை ஒரு இளைஞன் செய்தால் மிகச் சிறந்த மனைவி அமைவாள்;ஒரு கன்னி செய்து வழிபட்டால், பொறுப்பான அன்பான கணவன் அமைவான்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு நன்றிகள்!!!
இப்படிக்கு ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

One response to “சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!”

  1. Ganesan Rajesh says:

    ஐயா வணக்கம்,இந்த கட்டுரையில் அம்மன் வழிபாடு நான்குமாதங்கள்,நான்குமாதங்களினுள் அனைத்து வெள்ளிக்கிறழமையும் வழிபடவேண்டுமா என்பது எனக்கு தெளிவுபெறவில்லை.தயவு செய்து விளக்கவும். வாட்ஸ் அப்:006598601814

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.