எருமை மாட்டு தோல் அரசியல் டில்லியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு விமானம் தயாராக இருந்தது. எனதருகில் தமிழ் நாட்டில் பணிபுரியும் ஒரு நேர்மையான இந்திய ஆட்சி பணித் துறை உயர் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் பேச தொடங்கினோம் .

அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் தொழில்அதிபர்களும் எந்தளவுக்கு நேர்மையிலிருந்து கீழே வீழ்ந்து விட்டனர் என்பது குறித்து தான் எங்கள்பேச்சு இருந்தது. இறுதியில் அவரிடம் நான்நேரடியாக ஒரு கேள்வியை கேட்டேன். 'எப்போதிலிருந்து இந்த நேர்மைச் சரிவு ஏற்பட்டது?' பதில் நேரடியாகத்தான் இருந்தது 'இந்திரா காந்தி பதவிக்கு வந்தவுடன்'.அதுபோன்று திருபாய் அம்பானி எழுச்சி பெற்ற பிறகு வர்த்தகநேர்மை என்பது வீழ்ந்துவிட்டது என்றும் கூறினார். எனது கருத்தும் அதுவே .

ஜவஹர்லால் நேரு. இந்தியாவை ஜனநாயக நெறி முறைகளின் படி வாழ்ந்தும் வழிகாட்டியு ஜவஹர்லால் நேரும் , நடத்தியும் சென்றார். அவரிடம் ஒரு சில குறைகள் இருந்திருக்கலாம் , அவரது அரசியல் நீதி நெறி முறைகளை எவரும் கூறியதில்லை,

நேருவைவிட, இந்திராவுக்கு முன்பிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மேற்கோள் காட்டுவது இன்னும்பொருத்தமாக இருக்கும். நீதிநேர்மையில் லால்பகதூர் சாஸ்திரி நேருவைவிட உயர்ந்து நின்றார். ராஜ குடும்பத்தில் பிறந்த நேரு ஒரு போதும் பணத்துக்காக கஷ்டபட்டதில்லை, ஆனால் சாஸ்திரி ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பெரியகுடும்பத்தில் பிறந்தவர். பிறந்ததில் இருந்து கஷ்ட்டதிலேயே இருந்தவர் , ஏழையாகவே பிறந்த அவர் உள்துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தாலும் ஏழையாகவே இறந்தார்.

  லால்பகதூர் சாஸ்திரி 'வீடில்லாத உள்துறை மந்திரி '(Homeless Home minister) என அழைக்கபட்டவர் லால்பகதூர் சாஸ்திரி. அவர் லக்னோவில் வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். டில்லியில் அரசாங்க வீட்டில் வசித்தார். அரசாங்கம்கொடுத்த வீட்டில் வெறும் 2 அறைகளை மட்டும் எடுத்துகொண்டு சாஸ்திரி வாழ்ந்தார். அந்த வீட்டுக்கு பின்புறத்தில் பெரியவெட்டவெளி இருந்தது. அங்கிருந்த ஒரு பெரியமாமரத்தின் கீழ்தான் சாஸ்திரியின் மகன் திருமணம் நடந்தது அந்த அளவுக்கு எளிமையை கடைபிடித்தவர்.

ஒரு முறை சாஸ்திரி அவர்கள் மத்திய ரயில்வேதுறை அமைச்சராக இருந்த போது ஒருமுக்கிய ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப் பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். உடநே தனது அரசாங்க காரை திருப்பி அனுப்பி விட்டார். ஒரு பஸ் ஸ்டாண்டிற்குசென்று, தனது வீட்டிற்கு செல்ல, பஸ்பிடிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். இதை அந்தவழியாக சென்ற ராம்நாத் கோயங்கா பார்த்து அவரை தனது காரில் கூட்டிச்சென்று அவர் வீட்டில் விட்டார்.

சாஸ்திரிக்கு பிறகு தான் "நெறிமுறைகள் வீழ்ந்தன, வீழ்ச்சி தொடங்கியது" என ராம்நாத்கோயங்கா எப்போதும் வருத்ததுடன் சொல்வார். இத்தகைய உயர்ந்தநெறிகள், நீதி நிரம்பிய, அரசியல் அதிகாரம் தான், இந்திராகாந்திக்குக்கும் கிடைத்தது.

ஆனால் இந்திரா காந்தியோ தனது கட்சியையும், அரசாங்கதையும் ஏன் முடிவில் தேசத்தையுமே தனது பிடியில் கொண்டுவந்து நசுக்க, இந்திராகாந்தி அரசியல் அதிகாரத்தை ஆயுதமாக பயன் படுத்தினார். வேண்டுமென்றே திட்டமிட்டு, தன்னுடைய காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி பிளவு படுத்தினார். எல்லா மூத்த அரசியல் தலைவர்களையும் கேவல படுத்தினார். கர்மவீரர் காமராஜரும் இதில் அடக்கம். அவர் தான் இந்திரா காந்தியை பிரதமராகவே ஆக்கியவர். அவர்கள் ஆதரவுடன் தான் தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்றவுடநே அவர்களையும் தூக்கிவீசி விட்டார். சட்டத்தையும் தனக்கு வலுசேர்க்கும் வகையில் திருத்தியமைத்தார்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போதுதான் 'மாருதி ஊழல் நடந்தது. நகர்வாலா ஊழலிலும் அவர் சம்பந்தபட்டு இருப்பதாக அப்போது சந்தேகம் எழுந்தது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயத்தில் தான் 'எருமை மாட்டு தோல் அரசியல்' உருவானது. பொதுவாழ்வில் தவறான செயல்களில் ஈடுபட்டால், வெட்கப்படுவதற்கு பதில் அரசியல் வாதிகள் மானம், வெட்கம், சூடு, சொரணை என்று எதுவும் இன்றி, எங்களை யாரால் என்ன செய்துவிட முடியும்? எங்களிடம் தான் அரசியல் அதிகாரம் இருக்கிறதே . அதை எதிர்த்து யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என 'திமிரோடு' நடந்துகொண்டனர். இறுதியாக இந்திராகாந்தி 1975இல், நெருக்கடி நிலையை பாரத தேசத்தின் மீது அநியாயமாக திணித்தார். தனது அரசியல் எதிரி அனைவரையும் பாரபச்சமின்றி சிறையில் அடைத்தார்.

இந்திரா காந்திக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். மாபெரும் நெறி முறைகளையும், மாபெரும் அமைப்புகளையும், சுவீகரித்து நீங்கள் பதவிக்கு வந்துல்லீர். ஆனால் அவை அனைத்தையும் அழித்து ஒழித்து சின்னா பின்னமாக்கி விட்டு நீங்கள் போகிறீர்கள் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவுகள்தான் தேசமே இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது , தேய்ந்து கொண்டிருக்கிறது, அரசியல் நீதியை நெறிகளை திரும்ப கொண்டு வர எப்போதோ, விதி விலக்காக சில முயற்சிகள் செய்யபடுகின்றன.

உதாரணமாக, அத்வானி அவர்கள் மீது ஹவாலா ஊழல் குற்றசாட்டு எழுந்தபோது , அவர் தானாகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமாசெய்தார். தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, தான் தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்தார். அதேமாதிரி நடந்தும் கொண்டார்.

இப்போது அம்பானிக்கு வருவோம்; விதிகளை இயற்றுபவரிடமே அம்பானி கைகோர்த்து கொண்டு அசைக்க முடியாதவராக உருவெடுத்தார். அவர்களோ அம்பானிக்கு வசதியாக துணை விதிகளை உருவாக்கி வசதிகள் செய்து கொடுத்தனர். இவைகள் விதிகளை மீறாமலேயே காரியம் சாதித்துகொள்ள வழிவகுத்தது . அரசு , அரசாங்கத்தில் முக்கியபங்கு வகிப்பவர்களிடம் அம்பானி தனது வணிகத்தில் கிடைத்த, சட்டவிரோதமாக சம்பாதித்த செல்வங்களை அள்ளிவிட்டு அவர்களையும் தனது பங்குதாரராக மாற்றி விட்டார்.

டாட்டா, பிர்லா, பஜாஜ், மகிந்திரா, என்று அனைவரைவிடவும் அம்பானி தான் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். டாட்டா நீதி, நெறிகளை வியாபாரத்தில் கடைபிடித்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக, முன் மாதிரியாகத் இருந்தார். அம்பானியோ 'வியாபாரத்தில் வெற்றி' என்பதற்க்கு மட்டுமே முன் மாதிரியாக இருந்தார். அம்பானியுடன் போட்டி போட முடியவில்லையே என டாட்டாவை ஊடகங்கள் பரிகாசம்செய்தன; அதேஊடகங்கள் எந்த நெறி முறைகளையும் பின்பற்றாமல் , வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்தையே குறிக்கொளாக கொண்டுசெயல்பட்ட அம்பானியின் வெற்றியை வானளாவ புகழ்ந்தன.

இந்திராக் காந்தியாவது அதிகார வர்க்கத்தை , ஊடகங்களை எதிர்த்து போராடினார். அம்பானி ஒரு போதும் போராடவில்லை, மாறாக அனைவரையும் 'விலைக்கு வாங்கி' வளைத்து போட்டு விட்டார். எல்லோருடைய மதிப்பையும் அவரது பணத்தில் எடைபோட்டார். அவரது பணம் ராம் நாத் கோயங்காவிற்கு முன்னால் மட்டும் எடுபடவில்லை .அப்போது தான் அம்பானி யுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. அம்பானி அந்தசமயத்தில் ஒரு கடிதத்தை 'போர்ஜரி' செய்தார். தனக்கும் ராம் நாத் கோயங்கோவுக்கும் இடையே நடந்துகொண்டு இருந்த யுத்தத்தை அவர் ராஜீவ்காந்தி பக்கம் திருப்பி விட்டார். அம்பானி நெறி முறைகளை துவைத்து துவம்சம்செய்தார்.

அரசு மற்றும் அரசில் முக்கியபங்கு வகிப்பவர்களுடன் கூட்டுசேர்ந்து கொள்ளையடித்த செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு எந்த நெறி முறைகளை பற்றியும் கவலைபடாமல் 'வியாபார வெற்றி ஒன்றையே ' குறிக் கோளாக கொண்டு செயல்படுவது தான் "அம்பானி பாணி". இன்று நடக்கும் கோடானு கோடி ஊழல்களுக்கு,அம்பானியின் இந்த அணுகுமுறை தான் அச்சாணியாகும்.

அப்படி எனில் எல்லாமே போய்விட்டதா? அப்படி இல்லை அரசியலிலும், வணிகத்திலும் இன்னும் நல்லநேர்மையான ஆண்களும், பெண்களும் உள்ளார்கள் . அவர்கள் இப்போது நிலவும் ஊழல்மலிந்த சூழ் நிலையை எதிர்த்து போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். சாதாரண மக்கள் இன்றும் எளிமையான, ஊழல் அற்ற வாழ்வு தான் வாழ்கிறார்கள். லால்பகதூர் சாஸ்திரி போன்ற ஒருதலைவரை எதிர்பார்த்து தான் அவர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.