இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை ஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவரை பார்த்து "அடேய் மூடனே! என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் உன்னை சபிக்கிறேன்" என சாபம் கொடுத்தார். சாபம்பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்தவருக்கு ஒரு பயம் வந்தது.

அவர் தனது குழந்தைகளிடம் வந்தார். தனது மூத்த புதல்வனை பார்த்து சொன்னார், "மகனே! நான்செய்த ஒரு தவறால் பன்றியாக மாறும் சாபத்தை ஒருமுனிவர் எனக்கு தந்து விட்டார். பன்றியான பிறகு நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு தெரியலை. அதை நினைகும்போது பயமாக உள்ளது . அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நான் பன்றியாக மாறிய உடனே காட்டுக்கு சென்று விடுவேன். நான் எங்கேருந்தாலும் நீ தேடி வந்து என்னை கொன்று விடு! ஒரு பன்றியாக என்னால் வாழ முடியாது" என தெரிவித்தார் .

சிலநாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய்விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மகன் தந்தையை தேடி காட்டுக்குள் குளம் குட்டைகளிலேல்லாம் தேடி அலைகிறான் . எங்கேயாவது பன்றி கூட்டங்களைப் பார்த்து விட்டால் உடனே அதன் அருகிலேபோய் "அப்பா" என அழைப்பான். அவைகள் மிரண்டு ஓடி விடும். இவனுக்கு தன் தந்தையை மனித ரூபத்தில் தெரியுமேதவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! எனவே தேடிக்கொண்டே இருந்தான்.

இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியாக ஒருகுளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என கூப்பிட்டான். உடனே ஒருபன்றி வந்து நின்றது. அதன் பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடி வந்தது. குட்டிகளும் ஓடிவந்தன . பன்றி ரூபத்தில் இருந்த_தந்தை கேட்டார் "மகனே வந்து விட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனேயே உங்களை கொன்று விட சொன்னீர்களே! அதனால்தான் காடெல்லாம்தேடி உங்களை இப் பொழுது கண்டு பிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்றட்டுமா?" என கேட்டான் மகன்.

அதற்கு தந்தை_அவசரமாக "வேண்டாம் மகனே வேண்டாம்! என்னை அவசரப்பட்டு கொன்றுவிடதே . நான் இங்கேயே_வாழ்ந்து இந்த இடத்திற்கேற்ப்ப ஒருதுணையையும் சேர்த்து 3 குட்டிகளையும் பெற்றாகிவிட்டது. இப்பொழுது இதுவே_எனக்கு போதுமானதாகி விட்டது. எனவேஇங்கேயே என்னை விட்டு விடு" என கேட்டுக்கொண்டார் .

இந்தக்கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லபடும் தர்மம் என்னவெனில் எங்கேபோய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என இருக்கும் இடத்திற்க் கேற்ப்ப வாழப்பழகி கொள்வது பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும் போது ரோமானியனாக இரு" என ஆங்கிலத்தில் ஒருவாசகம் உண்டு . இதுதான் அது. சிலருக்கு தலையனை_இல்லாமல் தூக்கம்வராது. யார் வீட்டுக்கு போனாலும் படுக்கும்போது நல்ல தலையனைவேண்டும் என பிடிவாதம் பிடிப்பார்கள். உறவு கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம்சுளித்து சலித்து கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார்போல் சின்ன சின்ன விஷயத்தைக்கூட மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப்போக மாட்டார்கள்.

இன்ன சுவையில்தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில்தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களை பார்த்தால்தான் சிரிப்பேன் என சின்ன சின்ன விஷயங்களில் பலவிதமாக மனிதர்கள் தங்களை தாங்களே ஒருவிலங்கில் பினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள்_வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்துவிட்டு மிகவும் திறந்தமனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான_கதையின் மூலம் இந்துதர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்துதர்மத்தை கேலி செய்தும் பழித்தும் பேசி வரும் தருணத்தில்  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை அமெரிக்காபோன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிசெய்து பல புத்தகங்களை வெளியிட்டுகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மதரீதியாக சொல்லி கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்துதர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில்பதியும் வகையில் சொல்லி கொடுக்கப்படுகிறது.

அதாவது, மன கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என ஒருவிஷயத்தை இந்துதர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலு ம் வாழலாம் என எங்கள் கலாச்சாரத்தினால் இங்கே ஒவ்வொரு தனிமனிதரும் சுயநிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப்போய் விடுகிறார்கள். இந்துவாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக_வாழ்வது என்பதை மிகஅருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நமது மனதை மிக எளிமையாக பக்குவபடுத்த இந்து தர்மத்தை விட வெறெதுவும் இருக்கமுடியாது. மனிதன் ஒருசாபத்தால் பன்றியாக முடியுமா என கருப்புச் சட்டை முட்டாளை போல் கேள்வி கேட்காமல் இந்தக்கதை சொல்லி கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளுவதே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இதைபோன்ற கதைகளை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர் காலத்தில் மிக பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

நன்றி சுபவனம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.