டிஎம்.நாயர் பார்ப்பன கூட்டம் நடுங்கவேண்டும்; என 100 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டிஎம்.நாயர் அழைப்புவிடுத்ததாகவும், அதையே மீண்டும் தான் கூறுவதாகவும் கருணாநிதி உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார் .

திராவிடஇயக்க வரலாற்றை அறிவதற்குமுன்பு, அதில் டிஎம்.நாயரின் பங்களிப்பை தெரிந்துகொள்வோம்.

இந்திய சட்ட மன்ற தேர்தல் 1916 இல் நடந்தபோது, டிஎம்.நாயர் வேட்பாளராக போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என அறியப்பட்ட விஎஸ்.சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதேதேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும். பிறதொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கேவி.ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கபட்டனர்.

வெகுஜன ஆதரவில்லாததினால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள்கூடி, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள் தான் தங்களைத் தடுத்துவிட்டார்கள் என்பது அவர்களது கண்டு பிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு எனும் கொள்கையை வகுத்து கொண்டார்கள். இப்படி அமைந்தது தான் "தென்னிந்திய நல உரிமை சங்கம்", இந்த அமைப்பு தான் ஜஸ்டிஸ் எனும் நாளிதழையும் நடத்தி வந்தது . நாளடைவில், தென்னிதிய நல உரிமை சங்கத்தை பொது மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக்கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்கு தடைபோட முடியாமல் தவித்து கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், நீதி கட்சியின் வளர்ச்சிக்கு உதவினர்.

டிஎம்.நாயர், அக்.7, 1917-இல் நிகழ்த்திய சொற் பொழிவு திராவிட இயக்கத்தினரால் சிறப்பித்து சொல்லபடுகிறது. சென்னையின் ஸ்பர்டாங் சாலை பகுதியில் நடந்த பொது கூட்டத்தில் அவர் பேசினார். அந்த சொற்பொழிவை வரலாற்று சிறப்பு மிக்க வீரங்செறிந்த எழுச்சி மிக்க, உணர்ச்சி ஊட்ட கூடிய சொற் பொழிவு என தமது 'திராவிட இயக்க வரலாறு' என்ற நூலில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த_உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கைவிளக்க அறிக்கையாக கருதப்படுகிறது. எனவே , அதை விவரமாக பார்க்கலாம்.

 ஜாலியன் வாலாபாக் படு கொலையை ஜாலியன் வாலாபாக் படு கொலையை இந்தியர்கள் அனைவரும் ஒருகுரலாக கண்டனம் தெரிவித்த காலத்தில், அந்த படுகொலையை ஆதரித்து அறிக்கைவிட்ட பெருமை டிஎம்.நாயருக்கு உண்டு என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

இனவேறுபாடு எனும் ஆயுதத்தை கொண்டு, இந்தியர்களுக்கிடையே பிளவை உண்டாக்கவேண்டும் என்பதே டிஎம்.நாயரின் நோக்கம். ஆனால், தமிழ் நாட்டிலேயே அதற்கு ஆதரவில்லை. பெரும் பாலான தமிழறிஞர்கள் இதை எதிர்த்தனர் . அந்த எதிர்ப்பு இந்த தலை முறையிலும் தொடர்கிறது.

'ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளை காட்டி, கடவுள் என்ற ஒரு கற்பனை கருத்தை சுட்டி காட்டித் திராவிடர் களின் மூளையையே குழப்பி விட்டார்கள் என்கிறார் நாயர். (பக்கம் 220 திராவிட இயக்க வரலாறு).

ஆரியர்கள் கடவுள் சிந்தனையை திராவிடருக்கு தந்தனர் என்பது முழுப்பொய்.

'இந்திய மொழிகளிலேயே நாத்திகம்தொடர்பான கருத்துக்களை அதிகமாக கொண்டது சம்ஸ்க்ருதம்தான்' என்கிறார் நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் கடவுள் மறுப்பைபேசிய சாருவாகனை பற்றியசெய்தி இருக்கிறது.

'ஆரியர்கள் கடவுளை கொண்டுவந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்' என சொல்லும் டாக்டர் டிஎம்.நாயருக்கு தமிழர் வரலாறே தெரியாது என்று தான் சொல்லவேண்டும்.

தமிழ் அன்னையின் மணி முடியாகிய திருக்குறளில், கடவுள் வாழ்த்தாக 10 குறட்பாக்கள் இருக்கின்றன . அதில் 7 குறட்பாட்கள் திருவடி பெருமையை பேசுகின்றன. உருவ வழிபாடும் திருவடி போற்றுதலும் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவத்தில் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்து தமிழரும், இயல்பாகவே_ஹிந்துக்களாக இருந்தனர் என அடித்து பேசலாம்.

கடவுள் வாழ்த்து மட்டும் அல்ல; இந்திரனை பற்றியும், சொர்க்கம், நரகம்_பற்றியும், ஊழ் வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியுள்ளார் . கடவுள்வேண்டாம் என சொல்லும் டிஎம்.நாயரின் வழியில் நடக்கும் திராவிடஇயக்கத்தவர் திருவள்ளுவரை சொந்தம்கொண்டாட முடியாது. இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் வரும் எனும் எண்ணத்தில் தான் திருக்குறளை ஈவே.ரா. ஒதுக்கி வைத்து விட்டார். 'மொத்தத்தில் முப்பது குரலுக்குமேல் தேறாது' என்பது ஈவேரா. வின் அறிவிப்பு.

இக்கட்டுரை ஏப்ரல் 4 ஆம் தேதியிட்ட துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.