அஸ்ஸாம் பெண் மீது நடந்த வன்கொடுமையை  பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம். பாஜக மகளிர் அணித்தலைவி ஸ்ம்ருதி இரானி, பாஜக தேசையச் செயலர் திருமதி ஆர்தி மெஹ்ரா, பாஜக தில்லி யூனியன் பிரதேச தலைவர் திரு.விஜேந்திர குப்தா, பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் தில்லி யூனியன் பிரதேச பாஜக மகளிர் அணித் தலைவி திருமதி ஷிக்ஹா ராய்

ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW – National Commission for Women) தலைவர் திருமதி மம்தா ஷர்மா அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு பாஜக மகளிர் அணி தன்னுடைய சீற்றத்தையும் வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறது. தேசிய மகளிர் ஆணையத்தின் புலனாய்வுக் குழுவின் உறுப்பினரான அல்கா லம்பா என்பவரின் நடத்தையைப் பற்றி தங்களுடனான சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, தேசிய மகளிர் ஆணையத் தலைவி, தன்னுடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்கா லம்பா மீதான தன் அனுதாபத்தைத் தெரிவித்த போது, பாஜக குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தப் புலனாய்வுக் குழுவினர் கொடுத்த பரிந்துரைகளில் பத்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள “சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற பரிந்துரையை மிகவும் பெருமையுடன் கோடிட்டு காட்டியுள்ளார் NCW தலைவர். இருப்பினும், அந்தச் சம்பவத்தை எடிட் செய்யாமல் முழுமையான வீடியோ பதிவை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உருவம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கோடிட்டு காட்டி, “யூ டியூப்” சானலில் பதிவேற்றம் செய்த தொலைக்காட்சி நிற்வனத்தின் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி, அந்த அறிக்கை எந்த பரிந்துரையும் செய்யாமல் மௌனம் சாதித்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் அரசின் முத்த அமைச்சர் ஒருவருக்குச் சொந்தம் என்பது பொதுவில் அனைவருக்கும் தெரிந்த செய்தி. அந்தப் பெண் மீது நடந்த வன்கொடுமைச் சம்பவத்தில் காங்கிரஸ் இளைஞர் அணியினரின் பங்கு என்ன என்று கேட்டதற்கு, தான் மாநில அரசின் அறிக்கைக்காக காத்திருப்பதாகச் சொன்னார் NCW தலைவர். காங்கிரஸ் உறுப்பினர்களின் பங்கு விசாரிக்கப்பட வேண்டும் என்கிற குறிப்பு NCW அஸ்ஸாம் மாநில அரசுக்குக் கொடுத்துள்ள பரிந்துரைகளில் இல்லை.

மாநில அரசுக்குக் கொடுத்துள்ள பரிந்துரைகள் எந்த கால அளவிற்குள் மேற்கொள்ளப்படும் என்கிற விஷயத்தில் NCW தலைவர் மௌனம் சாதித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையமும் அது அமைத்த உண்மைக் கண்டறியும் குழுவும், கவுஹாத்தியில் அப்பாவிப் பெண் மீது நடந்துள்ள இந்த வன்கொடுமை சம்பவத்தை, ஊடகங்களில் தாங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திய இந்த வெட்கக்கேடான செயலை, வரவிருக்கும் மழைக்காலத் தொடரில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்பலப்படுத்துவோம்.

(தர்ஷனா ஜர்தோஷ்)

பொதுச் செயலாளர்

பாஜக மகளிர் அணி

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.