மனித நேயத்தின் மையம் இந்தியாதான் என்றால் அது மிகையல்ல கருப்பான களையான முகத்தை கொண்ட ஓப்ரா வின்பிரேயை உலகமெங்கும் இருக்கும் தொலைக் காட்சி பார்வையாளர்கள் நன்கு_அறிவார்கள். பல துறைகளை சார்ந்த பிரபலங்களுடன் அவர் மேற்கொண்ட 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி மிகவும் பிரசித்திபெற்றவை.

நீக்ரோவான அவர் மிகஏழ்மையான , வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் சிறு வயதில் சரியான உணவு நல்ல உடைகள் கூட அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் அவர் கஷ்டப்பட்டு படித்து . அறிவை ஏணியாக்கி உயர்த்தி அகிலமே பாராட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளார்

ராஜஸ்தானின் தலை நகரான ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய திருவிழாவில் அவர் கலந்துகொண்டார். ஊடகவியலாளர் ஃபர்காதத் அவருடன் கலந்துரை யாடினார். 'ஓ, ஓப்ரா இன் ஜெய்ப்பூர்' எண்ணும் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடல் மிகஅருமையாக அமைந்திருந்த்து.

இந்தியாவை பற்றிய 3 விஷயங்கள் என்னை வியக்கவைத்துள்ளன என ஓப்ரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: " இந்தியா குழப்பம் மிகுந்த நாடாக தோன்றுகிறது. ஆரம்பத்தில் எனக்கும் இந்த எண்ணம்தான் உருவானது . ஆனால் இதுமேலோட்டமான பார்வையாகும். இதன் அடிஆழத்தில் அமைதி குடிகொண்டுள்ளது . இரண்டாவதாக, இந்தியர்கள் மத்தியில் 'கர்மா' எனும் உணர்வு காணப்படுகின்றது. இந்தியர்களின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பொதிந்துள்ளது. இந்தியர்கள் மதத்தைப்பற்றி பேசி கொண்டிருப்பதுடன் நின்றுவிடவில்லை. அவர்களின் வாழ்க்கையே மத அடிப்படையிலானதுதான். அவர்களது வாழ்க்கையில் இருந்து மதத்தை பிரித்து பார்க்கவே முடியாது."

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இந்தியர்களின் குடும்ப வாழ்க்கை முறைகளும் ஓப்ராவை வியக்க வைத்திருக்கிறது . தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது : "அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் எனது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 'நீங்கள் உங்கள் தாய் தந்தையுடன் சேர்ந்து வசித்து வருகிறீர்களே?' என அபிஷேக்கிடம் கேட்டேன். அதற்கு அவர் 'இதிலென்ன ஆச்சரியம் உள்ளது ? இந்தியாவின் பாரம்பரியமே கூட்டுக்குடும்பம் தான். ஒருவரையொருவர் சார்ந்து நெருங்கி ஒரேகுடும்பமாக வாழ்வதுதான் இந்திய பாரம்பரியமாகும்' என பதிலளித்தார். இது என்னை நெகிழச்செய்து விட்ட்து."

 மும்பை சேரி பகுதிக்கும் ஓப்ரா சென்றார். அங்கு வசிக்கும் குடிசை வாசிகளிடமும் நெருங்கி பழகினார். அவர் பல இடங்களுக்கும் விஜயம்செய்ய தவறவில்லை. அரண்மனைககும் சென்றார், ஆசிரமத்துக்கும் சென்றார். பிருந்தாவனத்தில் இருந்த விதவைகளோடும் அவர் கலந்துரை யாடினார். "சேரிப்பகுதியில் 11 வயது சிறுமியோருத்தி அவளது பெற்றோருடன் வசிக்கிறாள். அவளது குடிசையை பார்த்து நான் திகைத்துப்போய் விட்டேன். ஏழ்மையிலும் அவர்கள் என்னிடம் பாசமாக நடந்துகொண்டனர். குடும்பத்தில் இருந்த அனைவரும் என்னை உபசரித்தனர். அந்தசிறுமி படு சுட்டி, வகுப்பிலேயே அவள்தான் முதல் மாணவி. எதிர்காலத்தில் ஆசிரியை ஆவேன் என என்னிடம் கூறினாள். அவளது_நினைவுகள் என் உள்ளத்தில் என்றும் நிலைததிருக்கும்" என ஓப்ரா கூறினார்.

இந்திய அனுபவங்கள் குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : "நான் இங்கு திறந்தமனத்துடன் வந்தேன். இப்போது எனதுள்ளம் மிக விசாலமாகிவிட்ட்து. இங்கு நான்பெற்ற வாழ்வு சார்ந்த அனுபவங்கள் மிகசெழுமையானவை. இந்தியாவில்தான் மனிதநேயம் மிகச்சிறப்பாக உள்ளது. மனித நேயத்தின் மையம் இந்தியாதான் என்றால் அது மிகையல்ல.

இந்திய மக்களின் கனிவும் கரிசனமும் நெஞ்சை நெகிழவைத்து விட்டன. இந்திய நிகழ்வு சார்ந்த படங்களை நான்_பொக்கிஷமாக பாதுகாப்பேன். ஓபமா அமெரிக்க அதிபரானதை மறக்கமுடியாத நிகழ்வாக நான் கருதுகிறேன்.

ஓப்ரா பல பிரச்சனைகளுக்காக தனது நிகழ்ச்சியின் மூலமாக குரல் கொடுத்திருக்கிறார் . அநீதிகளுக்கு எதிராக போராடியுள்ளார். குறிப்பாக தென்ஆப்பிரிக்க பள்ளி ஒன்றில் நடந்த பாலியியல் முறை கேட்டுக்கு எதிராக அவர் உரத்தகுரல் எழுப்பினார். நீதிகிடைக்க வழிவகை செய்தார். பல அற பணிகளை அவர் மேற் கொண்டு வருகிறார்.

"உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்யுங்கள். இந்த பகிர்தல் தான் உங்களை உண்மையிலேயே செழுமைபடுத்த கூடியது. பகிர்வு தான் உங்களது உயிர்ப்புக்கு அர்த்தம்தருகிறது " என்பது ஓப்ராவின் திட மான நம்பிக்கையாகும் .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.