காங்கிரஸ் வீழ்ச்சியைச் சந்திக்கும்போது நாங்களே அதிகபட்சப் பயனைப் பெறுவோம் "காங்கிரஸ் வீழ்ச்சியைச் சந்தித்தால் நாங்களே பெரும்பயன் பெறுவோம்"

பாஜக தலைவர் அருண் ஜெட்லீ – "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பேட்டி

மாநிலங்கள் அவையின் எதிரணித்தலைவர் அருண் ஜேட்லி பா ஜ கட்சியின் சவால்களை எதிர்கொள்வோரில் முக்கியமானவர். அவர் ஆரதி ஆர். ஜெராத்திடம் "கட்சியில் எவ்விதமான மேல்மட்டக் குழப்பமும் இல்லை; அது புதிய பொறுப்பை ஏற்பதற்குத் தயாராகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

******************

பா ஜ கட்சி 2014 மக்களவைத் தேர்தல் முனைப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் செயல் திட்டத்தில் ஏன் குழம்பிய நிலையில் செயல்பட்டது ?

பா ஜ கட்சியின் செயல்திட்டத்தில் குழப்பமிருந்ததாக நான் நினைக்கவில்லை. எமது தேசிய ஜனநாயகக் கூட்டணி நண்பர்களைத் தவிர, காங்கிரஸ் அணி சேராத பிராந்தியக் அருண் ஜெட்லீகட்சிகளையும் கலந்தாலோசிக்க விரும்பினோம். காங்கிரஸ் தனக்கே உரிய சூழ்ச்சித் திறமையுடன் பலவகை உத்திகளையும் கையாண்டு, காங்கிரஸ் அல்லாத கட்சிகளையும் தான் நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்கச் செய்துவிட்டது. ஆனால் இது எவ்விதத்திலும் 2014 மக்களவைத் தேர்தலுக்கான எமது செயல்திட்டத்தைப் பாதிக்காது. நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை மக்கள் கைவிட்ட நிலையையே உணர்த்துகிறது. நாட்டின் மையப்பகுதியில் காங்கிரஸ் அல்லாத பெரும்பான்மை இடத்தை நாங்கள் கையகப்படுத்தியுள்ளோம். காங்கிரஸ் வீழ்ச்சியைச் சந்திக்கும்போது நாங்களே அதிகபட்சப் பயனைப் பெறுவோம்.

நீங்கள் குடியரசுத் தலைவர் தேர்வில் இரு முக்கியக் கூட்டாளிகளை இழந்துள்ளீர்கள். இது காங்கிரஸுக்கு ஆதாயம் தானே ?

இது ஒரு நல்ல கேள்வி; ஆனால் இதை அக்கட்சிகளிடமே கேட்க வேண்டும். அவர்கள் பெரும்பான்மை எதிரணியினரின் வேட்பாளரான பி. ஏ. சங்மாவை ஆதரிக்க வேண்டும் என நான் விரும்பினேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு தோல்வியில் முடிந்த கூட்டணி. ஐ.மு.கூ -2 ஆட்சி வழங்குவதில் தோல்விகண்ட அணி. ஐ மு கூவை எதிர்ப்போரும் அதன் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது கிடையாது.

பா ஜ கட்சி, காங்கிரஸைப் போலவே தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது எனும் கருத்து நிலவுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான பா ஜ க இடைத் தேர்தலை சந்திப்பதில் பீதி அடைந்துள்ளதா ?

நாங்கள் எந்நேரமும் தேர்தலுக்குத் தயார் நிலையில் உள்ளோம். ஆனால் அதற்கான நேரத்தை முடிவுகட்ட மாட்டோம். மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதைக் கவனித்துக்கொள்ளும். இரு முக்கியமான காங்கிரஸ் அல்லாத கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளை காங்கிரஸ் சமாளிக்கும் வரை, அது மக்களவையில் நீடிக்கும். அவற்றின் இரு தலைவர்களுமே கடுமையான ஊழல் விசாரணையில் சிக்கியுள்ளனர். ஊழல் செய்வோரை மாட்டிவிடலாம் எனும் எளிய உத்திகொண்டு காங்கிரஸ் சமாளித்து வருகிறது. நேர்மையானவர்களிடம் இந்த உத்தி பலிக்காது. அதனால்தான் அக்கட்சி திரிணமூல் காங்கிரஸை சமாளிக்கத் திணறுகிறது.

நீங்களும் ஒரு வேட்பாளரா ?

நான் என்னை ஒரு பா ஜ க தொண்டன் என்பதற்குமேல் பெரிதாகக் கருதியதில்லை.

உங்கள் மும்பை மாநாட்டுக்குப்பிறகு, நரேந்திர மோடிதான் 2014ன் பிரதமருக்கான வேட்பாளர் என்று தோன்றுகிறது.

உரிய நேரத்தில் நாங்கள் பிரதம மந்திரிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வோம். மோடியிடம் ஒரு நல்ல அரசை வழங்கிய தகுதி உள்ளது. ஆகவேதான் அவரது பெயர் அடிக்கடி அடிபடுகிறது. பா ஜ கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இணைந்து அவர்களது வேட்பாளரை முடிவு செய்வர்.

எல்.கே. அத்வானி அவர்கள் தம் வலைப்பூவில் எழுதியதுபோல் மக்கள் பா ஜ க செயல்பாடுகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா ?

மக்கள் பா ஜ கட்சியால் ஏமாற்றமடைந்ததாக நான் நினைக்கவில்லை. மக்கள் காங்கிரஸை அருண் ஜெட்லீஒதுக்கிவிட்டு ஒரு செயல் திறன்மிக்க கட்சியைத் தேர்வு செய்ய நினைப்பது முக்கியமான விஷயம். மாற்று அரசுக்கான கூட்டணியை பா ஜ க வால் திறம்பட நிர்வகிக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமை பெறச் செய்வது முதல் தேவை. பிறகு, உரிய நேரத்தில் உரிய தலைவரை நாங்கள் தேர்வு செய்துகொள்வோம்.

கட்டுப்பாடான கட்சியான பா ஜ கவில், காங்கிரஸை நினைவூட்டும் வகையில் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகளும் , குழப்பமும் ? பிரதமர் பதவிக்குப் போட்டி வலுக்கிறதா ?
கேள்வியின் அடிப்படையே தவறு. கட்டமைப்பு நிறைந்த எமது அணியில் வளர்ந்துவரும் தலைமைத் தகுதி அவ்வாறு எண்ணச் செய்கிறது. 'முடிவான தலைவர் யார் ?' என்பது ஒரு நேர்மையான கேள்வியாக இருக்க முடியும். ஜனநாயக நாடுகளான அமெரிக்கா போன்றவற்றில் கட்சி நெறிமுறை தலைவர்களைத் தேர்ந்தெடுத்து விடும். இந்தியாவில் கட்டமைப்போடு கூடிய எமது கட்சியோ அனுபவ முதிர்ச்சி, உட்கட்சி முடிவு இவற்றின் அடிப்படையில் தலைமையைத் தேர்ந்தெடுக்கிறது. வாரிசு அரசியல் வழக்கம் முடிவுக்கு வந்தால்தான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான மதிப்புத் தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.