தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு  டெல்லியில் இருந்து சென்னை நோக்கிவந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது . தீவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சனிக் கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில்நிலையத்தை இந்தரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடத்திலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. பயணிகள் அப்போது ஆழ்ந்த உறக்கத்தினில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து_வந்து தீயை அணைக்க போராடினர். அப்போது முதலில் தீயில்கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கபட்டன. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில் மேலும்பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கபட்டன. இதனால் தீவிபத்தில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply