பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களால், கடந்த 4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவுசெய்து வெற்றிகரமாக 5ம் ஆண்டிற்கு முன்னேறியுள்ளது. இதற்காக, பாஜக சார்பில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, டில்லியில் பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 4ம் ஆண்டின் நிறைவையொட்டி, கட்சி " தூய்மையான எண்ணங்கள், சரியானவளர்ச்சி " எனும் புதிய தாரகமந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட உள்ளதாக அமித் ஷா கூறினார்.
 

4 ஆண்டுகளில் ( 48 மாதங்கள்) இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது, 2014ம் ஆண்டில் 38 சதவீத அளவில் இருந்த சுகாதார வசதிகள், தற்போது 83 சதவீதமாக அதிகரித்துள்ளது.7 கோடிக்கும் மேற்பட்ட புதியகழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

31.52 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கி கணக்குகளால், 5.22 கோடி குடும்பங்கள், ஆண்டிற்கு ரூ. 330 என்ற வீதத்தில் குடும்பம் முழு வதிற்குமான ஆயுள்காப்பீட்டு வசதியை பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply