சாலை விபத்துக்களில் தினசரி 34 குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

கடந்த 2015ம் வருடத்தில், 17 வயதுக்குகீழ்பட்ட சுமார் 12, 500 குழந்தைகள் சாலைவிபத்துகளில் பலியாகியுள்ளனர். இவற்றில் பெரும்பா லானவை, இருசக்கர வாகனங்களில்தான் அதிக குழந்தைகள் பலியாகியுள்ளது, மத்திய அரசு எடுத்த குறிப்புகளில் தெரியவந்துள்ளது. இதனை யடுத்து குழந்தைகளும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, மோட்டார் வாகனசட்டம் 1988 ல் திருத்தம் கொண்டுவர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு அனைத்து அமைச்ச கங்களுக்கும் கருத்து கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் 18 ம் தேதி துவங்கும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

நாடு முழுவதிலும் சாலை விபத்துகளில் குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பார்லிமென்டில் இந்தசட்டம் இயற்றப்பட்டதும், குழந்தைகளை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துவரும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

Leave a Reply