சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்.எல்.ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்.தொடர்ந்து ஜெயலலிதா, பரப்பன அக்ரகாரம் சிறையில்

அடைக்கப்பட்டார். ஜெயலலிதா விரும்பினால் தமிழகசிறைக்கு மாறிக்கொள்ளலாம். இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்ற அறையிலிருந்து ஜெயலலிதா வெளியேவந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார்.

112 பக்க தீர்ப்பை நீதிபதி குன்கா படித்தார். தண்டனை முழுவிவரம் அறிவிக்கப்படும் முன்பே, ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்.

இதற்கிடையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; கடைகள் அடைக்கப் பட்டன. ஈரோடு, அரசு மருத்துவமனை முன்பு, திமுக., தலைவர் கருணா நிதியின் கொடும்பாவியை அ.தி.மு.க.வினர் எரித்தனர். விருத்தாசலம், ஒருங்கிணைந்த கோர்ட்வளாகத்தின் முன், கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் கூடினர். இந்நிலையில், இந்தவழக்கில் ஜெ., குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும், கருணாநிதி வீட்டின்முன் கூடியிருந்த தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

மதுரையில் உள்ள சுப்ரமணிய சாமி வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலமாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. காஞ்சி புரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஆத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், திருநெல்வேலி, பழநி, திருமங்கலம், வேலூர், காரைக்குடி, தூத்துக்குடி நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பும், பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.

Leave a Reply