நக்ஸல்கள்   தாக்குதலில்  காங்கிரஸார் 4 பேருக்கு தொடர்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் மேற்கொண்ட தாக்குதலில் காங்கிரஸார் நான்கு பேருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 25ம் தேதி சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் மேற்க்கொண்ட தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாயினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் காங்கிரஸார் 4 பேருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்குபேரும் மாவோயிஸ்ட் பிரிவுடன் தொடர்ந்து தகவல்தொடர்பில் இருந்துள்ளதும், அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளதையும் உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply