மருத்துவ கல்லூரியில் தகுதியில்லாத மாணவர்களுக்கு அனுமதிவழங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ரசீத்மசூத்துக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தண்டனைபெற்றால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது உள்ளிட்ட சட்டநெருக்கடியை சுப்ரீம் கோர்ட் அறிவித்த பின்னர் முதன் முறையாக தகுதி இழக்கும் நபர் மசூத் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம்அடைந்த காலம் முதல் ஊழல் வழக்கில் முதன்முதலாக பதவி இழக்கிறார்.

கடந்த 1990 – 91 ல் மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சராக இருந்த மசூத் , இந்நேரத்தில் திரிபுரா மருத்துவகல்லூரியில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி சட்டமீறல் கையாண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சேர்க்கைக்கு ஏற்பாடுசெய்தார். இதன் மூலம் ஆதாயம்பெற்றார் . இதனையடுத்து இவர்மீது லஞ்சம், ஊழல், சதி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்தவழக்கை சி.பி.ஐ.,விசாரித்து போதிய ஆதாரங்கள் திரட்டி இவர் குற்றவாளி என நிரூபித்தது.

இதனையடுத்து இவர் குற்றவாளி என்று கோர்ட் ஏற்றுக்கொண்டடு ரஷீத் மசூத்திற்கு4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அவர் எம்.பி. பதவி பறிபோகிறது. குற்றவாளிகள் பதவி இழக்கும் சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி இவர் பதவி இழக்கும் முதல் எம்பி.ஆவார்.

Leave a Reply