ம.பி., டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடி அலையால் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாஜக சார்பில் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி அலை வீசுவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 5 மாநில தேர்தல் என்பது அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும், காங்கிரஸூம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

230 தொகுதிகளை கொண்ட ம.பி.,யில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்தமாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்சும் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத்தேர்தலில் 150 இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ்கரில் தற்போது பாஜக ஆட்சிநடக்கிறது. இந்ததேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தமாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பாஜக 105 இடங்களை கைப்பற்றும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை இழந்து 76 தொகுதிகளை மட்டும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் காங்கிரஸ்கட்சி ஆட்சிநடக்கிறது. இங்கு முதல்வராக ஷீலாதீட்ஷித் உள்ளார். ஆனால் இந்தமுறை டெல்லியில் தாமரை மலரும், அதாவது பா.ஜ.க ஆட்சிக்குவரும் என்று கருதப்பசுகிறது. இங்கு பாஜக 36 இடங்களையும். காங்கிரஸ் 22 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ஆக மொத்தத்தில் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply