ஒடிஷா முதலமைச்சராக 4வது முறையாக பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவீன்பட்நாயக் இன்று பதவி ஏற்க உள்ளார். ஒடிஷா சட்ட சபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து 4வது முறையாக ஒடிஷா மாநிலத்தின் முதலமைச்சராக நவீன்பட்நாயக் இன்று பதவியேற்கிறார். இன்று காலை 10 மணியளவில் புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில், நவீன் பட்நாயக்கும் அமைச்சர்களும் பதவியேற்று கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.