நவிமும்பை ஷேவாவில் உள்ள ஜவகர்லால்நேரு துறைமுக பொறுப்பு கழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்புபொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தொழில் உள்கட்டமைப்பு திட்டம் 277 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது. இந்ததிட்டம் தனியார் நிதி பங்களிப்புடன் செய்யப்படுகிறது.

புதிதாக அமைய இருக்கும் சிறப்புபொருளாதார மண்டலத்தின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம்பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் சிறப்புபொருளாதார மண்டலம் இனிவரவிருக்கும் பொறியியல் உபகரணங்கள் பிரிவுகள், எலக்ட்ரானிக்ஸ் அன்டு ஹார்டுவேர் பிரிவுகள், மரபுசாரா எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும்.

இந்த சிறப்புபொருளாதார மண்டலத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அன்று பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், ஜவகர்லால்நேரு துறைமுக கழகத்தை இணைக்கும் வகையில், ரூ.1,927 கோடி மதிப்பீட்டில் தயாராகும் நெடுஞ்சாலை திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் பணிகள் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply