பிரதமரின் வாரணாசியில் தினமும் சுமார் 4 மணி நேரமாவது மக்கள்குறைகளை கேளுங்கள் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எம்எல்ஏ.,க்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பிரதமர் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்

பேரில் கடந்த சிலநாட்களாக வட மாநிலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில்சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இதனையொட்டி அவர் இரண்டு நாள்பயணமாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் வாரணாசியில் பிரதமர் அலுவலகம் திறக்கப்பட்டபோது குறைகளை கேட்க யாரும் இல்லை என அவரிடம் புகார் தெரிவித்தார். இதனை யடுத்து இந்தவிவகாரம் டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பின்னர் வாரணாசி தொதியில் உள்ள 6 எம்எல்ஏக்கள் மற்றும் எம்சிக்கள் ஆகியோரை அழைத்து மத்திய அமைச்சர் ஜெட்லி உத்தர விட்டார் என்று செய்திதொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்தார்.

Leave a Reply