பெண்கள் முன்னேற்றம் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி இது தான் பண்டித தீனதயாளின் விருப்பமாக இருந்தது. 365 நாட்கள் நடந்தது என்ன? சாதனைகள் என்ன என்பதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் என பல ஊழல்கள் நடைபெற்றது. இந்த ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் சிறை சென்றனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் அப்போது ஆட்சி நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகளாக டெல்லியில் அவர்களுடைய குரல்தான் ஓங்கி ஒலித்தது. அவர்களுடைய விருப்பப்படி தான் இந்த தேசம் ஆளப்பட்டது.

இதனால் தான் மக்கள் மாற்றம் கோரி, ஆட்சி மாற்றம் செய்தனர். அப்போது மட்டும் மக்கள் துணிச்சலான அந்த முடிவை எடுக்காமல் விட்டிருந்தால், நாடு இன்னும் அதலபாதாளத்துக்கு சென்று இருக்கும்.

இந்த ஓராண்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை மத்திய பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால், எள்ளளவுக் கூட எந்தத் துறையிலும் ஊழல் நடைபெறவில்லை. கடந்த 60 ஆண்டு காலமாக டெல்லியில் அனுபவித்து வந்தவர்களுக்கு கடந்த ஒருவருடம் நல்ல காலம் அல்ல.

அது உண்மைதான். ஊழல் செய்தவர்களையும், மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களையும் எனது ஆட்சிக் காலத்தில் கெட்ட நேரம் மட்டுமே ஆட்கொள்ளும். அதேசமயத்தில், நாட்டு மக்களுக்கு நல்ல நேரம் பிறந்திருக்கிறது.

எனது அரசு ஏழைகள், விவசாயிகளுக்காகப் பாடுபடும் அரசு. எனது தலைமையின் கீழ் இயங்கும் அரசில், உங்களின் (மக்களின்) பணத்தை எவராலும் கொள்ளையடிக்க முடியாது. இந்த ஓராண்டில் அரசுத் துறைகளில் ஊழல் ஏதும் நடைபெற்றதாக நீங்கள் கேள்விப்பட்டீர்களா? எந்த அரசியல்வாதியோ அல்லது அவரது மகனோ, மருமகனோ ஊழலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தனவா?

ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் இந்தச் செய்திகளைத் தவிர வேறு எந்த செய்தியையும் மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தங்களது பேராசைக்கு எந்தத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. விளையாட்டுத் துறையிலும் கூட அவர்கள் ஊழலை அரங்கேற்றினார்கள்.

விவசாயிகளின் அவலங்களைப் பற்றி தற்போது சிலர் பேசுகின்றனர். விவசாயிகளை இந்த அவல நிலைக்குத் தள்ளியவர்களே அவர்கள்தானே?. நாட்டின் கனிம வளங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. நிலக்கரிச் சுரங்கங்கள் முறைகேடாக பல நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்து ஓராண்டுக்குள்ளாக 29 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டு அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருமானம் ஈட்டப்பட்டது.

சமையல் எரிவாயு மானியத்தில் எவ்வளவு முறைகேடு தெரியுமா? நாங்கள் வந்து அதை கட்டுப்படுத்தி விட்டோம் என மார்தட்டி கொள்கிறோம். நாங்கள் சாதித்த சாதனைகளை சிலர் சோதனையாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு இனி சோதனை தான்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக்கு கூட்டணி ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டு காலம் மட்டும் நீடித்திருந்தால் ஒட்டுமொத்த நாடே அதல பாதாளத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கும். ஆனால், மக்கள் விழித்துக் கொண்டனர். மக்களின் எழுச்சியால் மட்டுமே இந்த நல்ல மாற்றம் சாத்தியமாயிற்று.

டெல்லியில் இருந்து ஒருரூபாய் சென்றால் அது கடைசி மனிதனுக்கு 15 பைசாவாக போய் சேருகிறது என்று ஒருமுறை ராஜீவ் காந்தி சொன்னார். இந்த அரசில் கடைசி மனிதனுக்கு ஒரு ரூபாயாக சென்று சேருகிறது.

நான் உங்களிடம் உளப் பூர்வமாக நல்லவிஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த அரசு விவசாயிகளிடம் அரசியல் செய்யாது. அடுத்த 4 ஆண்டுகளில் இலக்கு ஒன்று தான். இந்த அரசு ஏழைகளின் நலனை உறுதியாகபேணும். நமது நட்டின் விவசாயிகள் போதுமான தண்ணீர், மின்சாரம் மற்றும் நிலங்களை பெற நாங்கள் முயற்சி எடுத்துவருகிறோம்.

விவசாயிகள் தற்கொலை அரசியலாக்கப் படுகிறது. கடந்த 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் விவசாயிகள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். நாங்கள் ஏழைகளுக்கு வங்கிகணக்கு திறந்தோம். பலவருடங்களாக வங்கிகளுக்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை. 60 வருடங்ளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதற்குகாரணம் யார் என்பது குறித்து விவாதிக்க இங்கு நான் வரவில்லை.

மதுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது.

Leave a Reply