இந்தியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாட பிரதமர் முடிவுசெய்துள்ளார். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்க ப்படும்.

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. சிலநாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி பள்ளி மாணவர்களிடம் நேரடியாகபேச பிரதமர் முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply