டிசம்பர் 4 ,5 தேதிகளில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த படலாம் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு இதை ஏற்று டிசம்பர் மாதம் 4 அல்லது 5 தேதிகளில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

கடந்த நான்கு நாட்களாக இந்த பிரச்சினை காரணமாக பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டது. அதை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டுமென்ற அடிப்படையில் இந்தமுடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப் புடன் கூடிய விவாதம் நடத்துவதற்கான அறிகுறி_தென்படுகிறது.

Leave a Reply