இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள அருணாசலம் பிரதேசம் எல்லைபகுதியில் ரூ. 40 ஆயிரம்கோடி செலவில் சாலை அமைக்கும் திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள தாகவும் அருணாச்சல் பிரதேசத்தில் சர்வதேச எல்லையில் ஒட்டி 2000 கி.மீட்டர் தொலைவில் புதிய சாலை அமைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரீஜ்ஜீ தெரிவித்துள்ளார்.

இந்த புதியசாலை திட்டத்தால் அருணாசல் மலைபகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் பெருகும் மேலும் இந்திய எல்லை பாதுகாப்பு மற்றும் கண் காணிப்பு பணிகளுக்கு மட்டுமல்லாமல் சீனர்களின் ஊடுருவல் பெருமளவில் தடுக்கப்படும் என்றார்.

இத்திட்டத் திற்காக ரூ. 40 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று கூறியவர் இந்தியவரலாற்றில் முதல் முறையாக இந்தளவு நிதி ஒரே ஒரு கட்டமைப்பு திட்டத்திற்காக பயன் படுத்தபடவுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு செயல்படுத்தவுள்ள பிரம்மாண்ட சாலைதிட்டம் சீன ஊடுருவலுக்கு தக்கபதிலடியாக இருக்கும் என இந்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply